What to watch on OTT: Be Happy, Gladiator 2, Ponman - இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

2 hours ago
ARTICLE AD BOX

Be Happy (இந்தி) - Amazon Prime Video

Be happy

ரெமோ டி'சோசா இயக்கத்தில் அபிஷேக் பச்சன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Be Happy'. தந்தை - மகளுக்கான அன்பான உறவைப் பேசும் இத்திரைப்படம் 'Amazon Prime Video' ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது.

Aachari Baa (இந்தி)

ஹர்த்திக் கஜார் இயக்கத்தில் கபிர் பேடி, நேனு குப்தா, வட்ஷல் ஷெத் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Aachari Baa'. குடும்பத்தை ஒன்றினைக்கு நினைக்கும் பாட்டியின் நெகிழ்ச்சிக் கதையான இது 'Jio Hotstar' ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது.

தியேட்டர் டு ஓடிடி

பொன்மான் (மலையாளம்) - Jio Hotstar

பொன்மான்

ஜோதிஷ் சங்கர் இயக்கத்தில் பசில் ஜோசப் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'பொன்மான்'. திருமணத்திற்காக 25 சவரன் நகையைக் கடன் வாங்குவதைச் சுற்றி நடக்கும் திக் திக் திருமண கதையான இது 'Jio Hotstar' ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது.

Ponman Review: 'கல்யாண வீட்டில் திக்... திக்... திக்...' - பேசில் ஜோசப்பின் 'பொன்மேன்' மின்னுகிறதா?

Azaad (இந்தி) - Netflix

Azaad

அபிஷேக் கபூர் இயக்கத்தில் அஜய் தேவ்கன், ஆமன் தேவ்கன், மிஷ்ரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Azaad'. ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமான இது 'Netflix' ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது.

Emergency (இந்தி) - Netflix

Emergency

கங்கனா ரணாவத் இயக்கி நடித்திருக்கும் திரைப்பட்ம 'Emergency'. மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வாழ்கையைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படம் 'Netflix' ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது.

Gladiator II (ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி) - Amazon Prime Video

Gladiator II

பண்டைய கால ரோம் பேரரசில் போர் வீரர்களை அடிமைகளாக மாற்றி மக்கள், அரச குடும்பங்கள் மத்தியில் அவர்களை சண்டையிட வைப்பது பெரும் பொழுபோக்காக இருந்தது. இதை மையமாக வைத்து எடுக்கப்பட்டது 'Gladiator' முதல் பாக திரைப்படம். போரிலிருந்து விடுதலை பெற்று தனது மீதி வாழ்வை குடும்பத்துடன் வாழ வேண்டும் என்று நினைக்கும் மக்சிமஸ் என்ற போர்வீரன், அரசியல் சூழ்ச்சியால் தனது குடும்பத்தினரைப் படுகொலை செய்தவர்களை பழிவாங்குவதுதான் இதன் கதைக்களம். இதன் தொடர்ச்சியாக வெளியாகியிருக்கிறது Gladiator இரண்டாம் பாகம். முதல் பாகத்தை இயக்கிய ரிட்லி ஸ்காட் இயக்கத்தில் புதிய கதாநாயகனாக பால் மெஸ்கல் இதில் நடித்திருக்கிறார். இப்படம் 'Amazon Prime Video' ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது.

Agent (தெலுங்கு) - SonyLiv

சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் அகில் அக்கினேனி, மம்முட்டி, சாக்ஷி வைத்யா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்கு திரைப்படம் 'Agent'. ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமான இது 'SonyLiv' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Vanvaas (இந்தி) - ZEE5

Vanvaas

அனில் ஷர்மா இயக்கத்தில் நானா படேகர், உட்கர்ஷ் ஷர்மா, சிம்ரட், ராஜ்பல் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Vanvaas’. குடும்பத்தில் நடந்த உருக்கமான கதையைச் சொல்லும் இத்திரைப்படம் திரைப்படமான இது 'ZEE5' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Thrayam (மலையாளம்) - Amazon Prime Video

Thrayam

சஜித் சந்திரேஷன் இயக்கத்தில் டெய்ன் டேவிஸ், ராகுல் மாதவ், அனு மோகன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Thrayam'. திரில்லர் திரைப்படமான இது 'Thrayam' ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது.

Moana 2 (ஆங்கிலம்) - Jio Hotstar

Moana 2

டேவிட் ஜி. டெரிக் ஜூனியர், ஜேசன் ஹேண்ட், டானா லெடோக்ஸ் மில்லர் ஆகியோர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'Moana 2'. முதல் பாகத்தில் தனது இனக்குழுவைக் காப்பாற்றிய மோனா, இந்த இரண்டாம் பாகத்தில் பல இனக்குழுக்களை ஒன்றாக இணைக்க முயல்கிறார். அதற்காகப் புதிய கடல் சாகசங்களைச் செய்கிறார். மாயாஜாலங்கள் நிறைந்த கடல் சாகச திரைப்படமான இது 'Jio Hotstar' ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது.

Read Entire Article