ARTICLE AD BOX
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களுள் ஒருவர் விராட் கோலி. 36 வயதாகும் இவர் ஏற்கெனவே சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட நிலையில், மற்றொரு ஆஸ்திரெலிய டூர் தனக்குச் சாத்தியப்படாமல் இருக்கலாம் என்று கூறியதுடன், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு என்ன செய்வது என்பது குறித்துப் பேசியுள்ளார்.
பார்டர் கவாஸ்கர் கோப்பை 2024-25 தொடர் விராட் கோலிக்குச் சோதனையான ஒன்றாக அமைந்தது. தொடரில் அவரது ஃபார்ம் படிப்படியாகச் சரிந்ததுடன் இந்திய அணியும் தொடரை இழந்தது. அந்த தொடரில் ஒரு செஞ்சுரி அடித்தாலும் அவரது ஆவரேஜ் வெறும் 24 ஆகத்தான் இருந்தது. மொத்த தொடரிலும் 190 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார்.

அவர் ஆஸ்திரேலியாவில் திணறியது பற்றி, பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, "எனக்கு இன்னொரு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் இல்லாமல் இருக்கலாம், அதனால் நான் கடந்த காலத்தில் என்ன நடந்திருந்தாலும் இப்போது நிம்மதியாக இருக்கிறேன்" எனக் கூறியுள்ளார்.
மேலும், இப்போது தன் மனதில் ஓய்வுபெறுவது பற்றிய எண்ணம் இல்லை எனவும் விளக்கியுள்ளார். "பதட்டப்படாதீர்கள். நான் எதையும் அறிவிக்கவில்லை. இப்போது எல்லாமும் நன்றாகச் சென்றுகொண்டிருக்கிறது. நான் இப்போதும் விளையாட்டை நேசிக்கிறேன்" எனப் பேசியுள்ளார்.
"விளையாடும்போது ஏற்படும் மகிழ்ச்சி, போட்டித்தன்மை, விளையாட்டின் மீதான காதல் இருக்கும்வரை நான் தொடர்ந்து விளையாடுவேன். நான் எந்த சாதனைக்காகவும் விளையாடவில்லை" என்றும் பேசியுள்ளார்.
விளையாட்டிலிருந்து ஓய்வை அறிவிக்கச் சரியான தருணம் எது என்பது குறித்து ராகுல் டிராவிட்டிடம் உரையாடியதைக் கோலி நினைவு கூர்ந்தார்.

"நான் டிராவிட்டுடன் சுவாரஸ்யமான உரையாடலை மேற்கொண்டேன். அவர், நாம் எப்போதும் நமது சுயத்துடன் தொடர்பில் இருக்க வேண்டும் எனக் கூறினார். நம் வாழ்க்கையில் எந்த இடத்தில் நாம் நிற்கிறோம் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும், அதற்கான பதில் எளிமையானது அல்ல.
Varun Chakravarthy: "போனில் மிரட்டல்கள் வந்தன" - கரியரின் இருண்ட காலம் குறித்து மனம் திறந்த வருண்!நீண்டநாள் விளையாடியவர்களுக்கு இதைப் புரிந்துகொள்ள அவகாசம் எடுக்கலாம். நாம் நமது 20களில் செய்த பல விஷயங்களை 30களில் செய்ய முடியாது. நான் எனது வாழ்க்கையில் கொஞ்சம் வித்தியாசமான இடத்தில் இருக்கிறேன்" எனக் கோலி பேசினார்.
மேலும், "நம் வாழ்க்கையில் என்ன நடந்தாலும் நாம் அதிலிருந்து நிம்மதியாக இருக்க வேண்டும்... நீங்கள் வெளியிலிருந்து வரும் அதிருப்திகள் குறித்துச் சிந்திக்கத் தொடங்கிவிட்டால், உங்கள் மீது நீங்களே அதிக சுமைகளை வைக்கத் தொடங்குவீர்கள். அதைத்தான் நான் ஆஸ்திரேலியாவில் அனுபவித்தேன்" என்று கூறினார்.
Virat Kohli: '335 கேட்ச்கள்' - ரிக்கி பான்டிங், ராகுல் ட்ராவிட்டை கடந்து விராட் கோலி சாதனை!வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks