ARTICLE AD BOX
ஐபிஎல் 18-வது சீசன், நடப்பு சாம்பியன் கொல்கத்தா vs பெங்களூரு ஆட்டத்துடன் ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கியது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து கொல்கத்தா நிர்ணயித்த 172 என்ற இலக்கை, 17-வது ஓவரிலேயே எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு வெற்றிபெற்றிருக்கிறது. ஓப்பனிங்கில் இறங்கி 36 பந்துகளில் அதிரடியாக 59 ரன்கள் அடித்து கடைசிவரை களத்தில் நாட் அவுட் பேட்ஸ்மேனாக நின்றார் விராட் கோலி. மேலும், இந்த போட்டியில் 38 ரன்களை தொட்டபோது ஐபிஎல்லில் மேலும் ஒரு சாதனையில் தனது பெயரைப் பதிவுசெய்தார் கோலி.

Virat Kohli
அதாவது இன்றைய போட்டிக்கு முன்புவரை கொல்கத்தா அணிக்கெதிராக கோலி 31 ஆட்டங்களில் ஒரு சதம், ஐந்து அரைசதங்களுடன் 962 ரன்களை அடித்திருந்தார். இந்த நிலையில், இந்த போட்டியில் கோலி 38 ரன்களை அடித்தபோது கொல்கத்தாவுக்கெதிராக 1000 ரன்களைப் பூர்த்தி செய்தார்.

இதற்கு முன்பாக பஞ்சாப் (1030), டெல்லி (1057), சென்னை (1053) ஆகிய அணிகளுக்கெதிராக 1000 ரன்களைக் கடந்தபோதே, ஐபிஎல்லில் அதிக அணிகளுக்கெதிராக 1000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனை படைத்திருந்த கோலி, தற்போது தனது லிஸ்டில் நான்காவது அணியாக கொல்கத்தாவையும் சேர்த்திருக்கிறார்.
ஏற்கெனவே, ஐபிஎல் சாதனைப் பட்டியலில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையும் (8,063 ரன்கள்), ஒரே சீசனில் அதிக சதங்கள் (4), அதிக ரன்கள் (973) அடித்த வீரர் என்ற சாதனையும் விராட் கோலி வசமே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
KKR vs RCB: ஸ்டம்ப் எகிறியும் சுனில் நரைன் `நாட் அவுட்' ஏன்? - காரணம் இதுதான்Vikatan Play
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play