ARTICLE AD BOX
ஒரு கேலிச் சித்திரம் வெளியிட்டதற்காக விகடன் இணையதளம் பிப்ரவரி 15-ம் தேதி மாலையிலிருந்து முடக்கப்பட்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள். மத்திய அரசின் தகவல் ஒலிபரப்புத் துறை முறையான அறிவிப்பு எதையும் விகடனுக்குத் தராமல் இந்த முடக்கத்தைச் செய்தது.
இதைத் தொடர்ந்து, இது தொடர்பான விசாரணை பிப்ரவரி 20-ம் தேதி நடைபெற்றது. குறிப்பிட்ட அந்த கார்ட்டூன் என்பது கருத்துச் சுதந்திரத்தின் வெளிப்பாடு என விரிவாக விகடன் தரப்பில் விளக்கம் தரப்பட்டது. இதைத் தொடர்ந்து பிப்ரவரி 25-ம் தேதி இரவு, இதுதொடர்பான மத்திய அரசின் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சக இறுதி உத்தரவு விகடனுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு தொடர்பாக அடுத்து செயல்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சட்ட நிபுணர்களுடன் விகடன் ஆலோசனை நடத்தி வருகிறது. கருத்துச் சுதந்திரத்தைக் காப்பதுடன் விகடன் தளத்தை மீட்பதற்கான சட்டப்பூர்வமான முயற்சிகளையும் விகடன் எடுத்து வருகிறது.
Vikatan Cartoon Row: "கருத்துரிமை பறிக்கப்படுவது கண்ணுக்கே தெரியாது" - எழுத்தாளர் தியடோர் பாஸ்கரன்