Vijay: விஜய் - சூர்யா ரிஜெக்ட் செய்து சூப்பர் ஹிட்டான படம்; இயக்குனரிடம் தளபதி சொன்ன வார்த்தை?

2 days ago
ARTICLE AD BOX

நடிகர் விஜயும், சூர்யாவும் ரிஜெக்ட் பண்ணி சூப்பர் ஹிட் ஆன படம் பற்றி பிரபல இயக்குனர் கூறியுள்ள தகவல் தற்போது வைரலாகி வருகிறது.
 

இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில், 2005 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் தான் 'சண்டக்கோழி'. இந்த திரைப்படம் நடிகர் விஷாலின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. விஷால் அதிரடி ஆக்சன் கதாபாத்திரத்தில் மாஸ் காட்டி இருந்த, இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மின் கதாநாயகியாக நடித்திருந்தார்.
 

மேலும் ராஜ்கிரண், லால், சுமன் ஷெட்டி, கஞ்சா கருப்பு,தலைவாசல் விஜய், சண்முகராஜன், உள்ளிட்ட பல முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தை விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணா, ஜி கே பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் கீழ் தயாரித்திருந்தார். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றி பெற்ற இந்த படம், குறித்து தற்போது இயக்குனர் லிங்குசாமி கூறியுள்ள தகவல் வைரலாகி வருகிறது.

தளபதியின் தலையெழுத்து... இத்தனை பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணினாரா விஜய்?
 

இந்தப் படத்தின் கதையை எழுதி முடித்ததும், தளபதி விஜய்யிடம் தான் இயக்குனர் லிங்குசாமி சென்று கதை சொன்னாராம். அப்போது படத்தின் முதல் பாதியை கேட்ட தளபதி விஜய், வேண்டாம் நிறுத்துங்க அப்படின்னு சொல்லிட்டாராம். இரண்டாவது பாதியையும் கேட்டிடுங்க கேட்டு விடுங்கள் என்று லிங்குசாமி சொன்ன நிலையில், ராஜ்கிரன் சார் உள்ள வந்ததுக்கு அப்புறம் அந்த படத்துல என்னை தனித்துவமா காட்ட வேற என்ன இருக்க போகுது? அப்படின்னு சொல்லி இந்த படத்தை நிராகரித்துவிட்டாராம்.
 

இதைத்தொடர்ந்து சூர்யாவிடமும் இந்த கதை சென்ற நிலையில், அவரும் ஒரு சில காரணங்களால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதாம். இதை தொடர்ந்து, நம்ப பையனையே ஹீரோவா வெச்சு இயக்கலாம் என விக்ரம் கிருஷ்ணாவிடம் லிங்கு சாமி கூற... அவரும் டபுள் ஓகே சொல்லிட்டார். அதுக்கு அப்பறம் என படம் பூஜையோடு துவங்கிய நிலையில், பக்கா ஆக்ஷன் படமாக ரிலீஸ் ஆனது. 
 

முதல்வன் முதல் ஆட்டோகிராப் வரை... நடிகர் விஜய் நடிக்க மறுத்து பிளாக்பஸ்டர் ஹிட்டான படங்களின் லிஸ்ட் இதோ

விஷாலை ரசிகர்கள் கொண்டாடிய நிலையில், படமும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து,  மீண்டும் லிங்குசாமியை பார்த்த விஜய், படம் ரொம்ப நல்ல இருக்கு. பையன் ஆக்ஷன் காட்சியில பின்னி இருக்கான் என சொன்னாராம். அதே போல் அந்த பையன் இண்டஸ்ட்ரிக்கு வரணும்னு இருக்கு சார். அதனால தான் இந்த கதை அவனுக்கு போய் இருக்குனு ரொம்ப கூலா சொன்னதாக லிங்கு சாமி கூறி இருக்காரு.
 

Read Entire Article