Vijay: மதுரையில் பயந்து பயந்து ரிலீஸ் செய்யப்பட்ட விஜய் படம்! என்ன படம்? ஏன்?

2 hours ago
ARTICLE AD BOX

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக உலா வருபவர் விஜய். நாளைய தீர்ப்பு படம் மூலமாக நாயகனாக அறிமுகமான நடிகர் விஜய்க்கு முதல் ப்ளாக்பஸ்டர் ஹிட் திரைப்படம் பூவே உனக்காக. அதுவரை சாதாரண நடிகராக உலா வந்த விஜய் இந்த படத்திற்கு பிறகு, தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக மாறினார்.

ரிலீஸ் செய்ய பயம்:

இந்த படம் பற்றி இயக்குனர் விக்ரமன் ஒரு முறை பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் கூறியதாவது, பூவே உனக்காக படம் வெளியீட்டின்போது எங்களுக்கு ஒரு பிரச்சினை. மதுரையில் ஒரு திரையரங்கில் எங்களுக்கு பிரச்சினை. மதுரையில் வியாழக்கிழமை ரிலீஸ் செய்தால்தான் எங்களுக்கு திரையரங்கள் கிடைக்கும். நல்ல திரையரங்கம்.

அப்போ ராமராஜன் படம் போட்றதாக இருந்தது. அப்போது, ராமராஜன் உச்சத்தில் இருந்தார். அனைத்து விநியோகஸ்தர்களும் பயம் காட்டினார்கள். மதுரையில் ரிசல்ட் நல்லா இல்லை என்றால் இங்கு யாரும் பிரிண்டே எடுக்க மாட்டார்கள். எந்த ஊர்லயும் ரிலீஸ் ஆகாது என்றார்கள்.

ஹவுஸ்புல்:

கடவுள் மேல நம்பிக்கையில் குருட்டு தைரியத்தில் ரிலீஸ் பண்ணோம். அந்த முதல் நாள் ரிசல்டே அங்கு தியேட்டர் ஹவுஸ்புல். ரிசல்ட் சூப்பர். கிளைமேக்ஸ் எக்ஸ்டிரானரினு கைதட்டிட்டு வந்தாங்க. கிளைமேக்ஸ்ல விஜய் இந்த சோகமே எனக்கு ஒரு சுகமான முடிவுதான் அப்படினு விஜய் குட்பையோடு போறப்ப எல்லாரும் எழுந்து கைதட்டி இருக்கிறார்கள்.

நாளைக்கு ரிலீஸ். அதுவரை 40 ப்ரிண்ட்தான் ஆர்டர் பண்ணாங்க. சாயங்காலத்துல 30 எக்ஸ்ட்ரா போயி 70 ப்ரிண்ட் ஆகிடுச்சு. ஒரு ஊர்ல 4 தியேட்டர்லதான் ரிலீஸ் பண்ணுவாங்க. அப்போ எல்லாம் அப்படிதான். என் படங்கள்லயே அதிக நாள் ஓடுன படமும் அதுதான். 275 நாட்கள். சென்னை, மதுரை, கோயம்புத்தூர்ல ஓடுனுச்சு.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

விஜய்க்கு திருப்புமுனை:

விக்ரமன் இயக்கிய இந்த படத்தில் விஜய்யுடன் சங்கீதா, சார்லி, அஞ்சு அரவிந்த், சார்லி, நாகேஷ், நம்பியார், ஜெய்கணேஷ், மலேசியா வாசுதேவன், சுகுமாரி, விஜயகுமாரி, மீசை முருகேசன் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.

இந்த படத்திற்கு விஜய்க்கு ஏராளமான காதல் திரைப்படங்கள் ரிலீசாகத் தொடங்கியது. விஜய்யின் திரைவாழ்வில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்திய பூவே உனக்காக படம் ரிலீசானபோது ராமராஜன் நடித்த அம்மன் கோயில் வாசலிலே படமும் ரிலீசாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article