ARTICLE AD BOX
Donald Trump Latest News Updates: 60ஆவது அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா நேற்று நடைபெற்றது. இரண்டாவது முறையாக டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக நேற்று பதவியேற்றுக்கொண்டார். 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற இந்த நிகழ்ச்சி கடுமையான பனிப்பொழிவு காரணமாக உள் அரங்கில் நடைபெற்றது.
அவருக்கு உலக தலைவர்கள் பலரும் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவரது X பக்கத்தில், டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுக்கொண்டதற்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மேலும் அந்த பதிவில்,"இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் வகையிலும், உலகிற்கு சிறந்த எதிர்காலத்தை வடிவமைக்கவும் மீண்டும் ஒருமுறை இணைந்து பணியாற்றுவதை நான் எதிர்நோக்கி காத்திருக்கிறேன். இந்த பதவிக்காலம் வெற்றிக்கரமாக இருக்கவும் வாழ்த்துக்கள்!" என குறிப்பிட்டுள்ளார்.
முதல் நாளிலேயே டொனால்ட் டிரம்ப் அதிரடி
இது ஒருபுறம் இருக்க டிரம்பும் தனது முதல் நாளில் இருந்தே அதிரடியை தொடங்கிவிட்டார் எனலாம். மெக்ஸிகோ எல்லையில் தற்போது அவசரநிலையை பிரகடனப்படுத்தி உள்ளார். இதனால், சட்டத்திற்கு புறம்பாக அமெரிக்காவுக்குள் மக்கள் நுழைவது தடுக்கப்படும், மேலும் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடியேறியிருக்கும் லட்சக்கணக்கானோர் விரைவில் நாடு கடத்தப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | இனி அமெரிக்காவில் ஆண், பெண் மட்டுமே! முதல் நாளே டிரம்ப் அதிரடி! புதிய சட்டம் அமல்!
மேலும், ஆண் மற்றும் பெண் என இரண்டு பாலினங்கள் மட்டுமே இன்றில் இருந்து அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ கொள்கையாக இருக்கும் எனவும் அவர் அறிவித்துள்ளார். மேலும், உலக சுகாதார மையத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாகவும் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். கொரோனா பெருந்தொற்று உட்பட சர்வதேச அளவில் பல நோய் தொற்றுகளை உலக சுகாதார மையம் தவறாக கையாண்டதாகவும், அதனால் அமெரிக்கா அதில் இருந்து விலகுவதாகவும் டிரம்ப் அறிவித்தார். டிரம்ப் அவரின் கடந்த ஆட்சியின் இறுதியிலும் இந்த முடிவை எடுத்திருந்தது நினைவுக்கூரத்தக்கது.
டொனால்ட் டிரம்ப் மீதான எதிர்பார்ப்புகள்
நேற்றைய பதவியேற்பு விழாவில் டிரம்ப்பின் பேச்சு அமெரிக்காவை மட்டுமின்றி உலக நாடுகளையும் உற்றுநோக்க வைத்துள்ளது. இனி வரும் காலங்களில் டிரம்பின் இதே அதிரடி தொடரும் எனலாம். டிரம்ப் எடுக்கப்போகும் முக்கிய முடிவுகள் உலக அரசியலில் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணும். ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கி, இஸ்ரேல் - பாலஸ்தீன போர் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் டிரம்ப் என்னென்ன கொள்கை முடிவுகளை எடுக்கப்போகிறார் என்பது கடும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
தர்ம சங்கடமாக முத்தமிட்ட டொனால்ட் டிரம்ப்
இதுஒருபுறம் இருக்க, நேற்றைய பதவியேற்பு விழாவில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்தன. அதில் ஒரு நிகழ்வின் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. பதவியேற்றுக் கொண்ட பின்னர் டொனால்ட் டிரம்ப் தனது மனைவியை நெற்றியில் முத்தமிட முயன்றார். ஆனால், அவரது மனைவி மெலினா டிரம்ப் நெற்றியை முழுவதுமாக மறைக்கும் அளவிற்கு தொப்பி ஒன்றை அணிந்திருந்தார்.
Trump tried to kiss Melania at the 60th Presidential Inauguration, but her hat had other plans. pic.twitter.com/w1kaXk4oxj
— Rio (@mario_balkans) January 20, 2025
இதனால், டிரம்ப் அவரது கன்னத்தில் முத்தமிட முயன்றார். மீண்டும் அந்த தொப்பி இடையூறாக இருந்ததால், அவர் தொப்பியை இடிக்காதவாறு, கன்னத்தில் முத்திடாமல் காற்றிலேயே முத்தமிட்டுச் சென்றார். இந்த வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதாவது, பதவியேற்பு விழாவில் அந்த தொப்பியால் டிரம்பிற்கு தர்ம சங்கடம் ஏற்பட்டதாக இணையத்தில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். மேலும் இதற்கு முன் தேர்தல் பிரச்சார நிகழ்வு ஒன்றிலும், நெற்றியில் முத்தமிட முயன்ற டிரம்பிற்கு, அவரது மனைவி மெலினா ஒத்துழைப்பு கொடுக்காத வீடியோ ஒன்றையும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
Watch Melania Trump's stiff body language. Watch her purposely turn her head when Donald goes in for the kiss pic.twitter.com/JpIgjn7LTA
— Dana Abercrombie (@sagesurge) July 19, 2024
மேலும் படிக்க | வெள்ளை மாளிகை மீது தாக்குதல்... இந்திய இளைஞருக்கு 8 ஆண்டுகள் சிறை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ