ARTICLE AD BOX
Vidamuyarchi OTT: வலிமையை விட மோசம்.. 3 வாரங்களில் ஓடிடிக்கு ஓடி வரும் விடாமுயற்சி.. பாவம் லைகா!
சென்னை: அஜித் குமார் கேட்ட 100 கோடிக்கும் அதிகமான சம்பளத்தையும் கொடுத்து விக்னேஷ் சிவன் வேண்டாம் என கண்டிஷன் போட அதற்கும் சம்மதித்து மகிழ் திருமேனி உள்ளே வந்த பின்னரும் அவருடைய ஆக்ஷன் கதையை பண்ணாமல் தன்னுடைய விருப்பமான ஹாலிவுட் படமான பிரேக்டவுன் படத்தின் ரீமேக்கை செய்ய சொல்ல அதற்கும் தலையாட்ட படம் வெளியானதும் பண்டிகையாக மாறும் என்கிற பில்டப் எல்லாம் வீணானது தான் மிச்சம்.
அஜித் குமார் நடிப்பில் வெளியான வலிமை படமே 155 கோடி ரூபாய் வசூலை உலகளவில் ஈட்டியது என தகவல்கள் வெளியாகி உள்ளன. துணிவு திரைப்படம் 200 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், விடாமுயற்சி திரைப்படம் வெறும் 145 கோடி தான் இதுவரை உலகளவில் வசூல் செய்துள்ளது என்றும் 150 கோடி வசூலை கடக்கவே போராடி வருவதாக கூறுகின்றனர்.

லைகா நிறுவனம் இதுவரை படத்தின் முதல் நாள் வசூல் முதல் எதையுமே அறிவிக்கவில்லை. பிரதீப் ரங்கநாதனின் டிராகன் திரைப்படம் முதல் 3 நாட்களில் 100 கோடி வசூலை கடந்துள்ளதாக அர்ச்சனா கல்பாத்தி அறிவித்துள்ள நிலையில், மீண்டும் விடாமுயற்சி ட்ரோகள் வைரலாகி வருகின்றன. இந்நிலையில், ஓடிடி அறிவிப்பையும் நெட்பிளிக்ஸ் வெளியிட்டுள்ளது.
ஓவர் பில்டப்: விடாமுயற்சி படத்தின் புரமோஷனுக்கும் வழக்கம் போல அஜித் குமார் வரவில்லை. கார் ரேஸிங்கில் தான் தனது மொத்த ஆர்வத்தையும் காட்டி வருகிறார். இயக்குநர் மகிழ் திருமேனி, ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ் மட்டுமே படத்திற்கு புரமோஷன் செய்தனர். நடிகை த்ரிஷா கூட பெரிதாக எதிலும் பங்கேற்கவில்லை. பொங்கலுக்கு படம் வெளியாகி இருந்தால் நிச்சயம் 200 கோடி வசூலாவது அடித்திருக்கும் என்றும் பிப்ரவரி மாதம் தள்ளிப்போன நிலையில், நம்ம படம் வரும் நாள் தான் பண்டிகை என அஜித் சொன்னார் என்றும் பெண்களுக்கான படம் என்றும் ஓவர் பில்டப்பை இயக்குநர் மகிழ் திருமேனி சொன்ன நிலையில், படம் வெளியான பின்னரும் படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனம் என முட்டுக் கொடுத்து வந்தார்.
ஓடிடி ரிலீஸ் தேதி: மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடித்த விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி 6ம் தேதி வெளியான நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் மார்ச் 3ம் தேதி திங்கட்கிழமையே வெளியாகப் போவதாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 4 வாரங்கள் முடிவதற்குள் அஜித் குமாரின் விடாமுயற்சி படம் ஓடிடிக்கு வருகிறதே என ட்ரோல்கள் குவிந்து வருகின்றன.

குட் பேட் அக்லி கைகொடுக்குமா?: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார், த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி ஏப்ரல் 10ம் தேதி தனுஷின் இட்லி கடை படத்துடன் மோதவுள்ளது. படத்தின் டீசர் இந்த மாத இறுதியில் வரவுள்ள நிலையில், அதுமட்டும் க்ளிக் ஆகிவிட்டால் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் குட் பேட் அக்லி படத்தை மிகப்பெரிய வெற்றிப் படமாக மாற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்க் ஆண்டனி படத்தை போல ஆதிக் ரவிச்சந்திரன் ஏதாவது ஸ்பெஷல் கான்செப்ட்டை அஜித் படத்துக்கு வைத்திருந்தால் போதும் என்கின்றனர்.