Vanitha Vijaykumar: மோசடியில் ஈடுபட்டாரா? வனிதா விஜயகுமார் மீது காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்!

20 hours ago
ARTICLE AD BOX

சர்ச்சைக்கு பெயர் போனவர் தான் நடிகை வனிதா விஜயகுமார். இவர்மீது  தற்போது கொடுக்கப்பட்ட புகாருக்கு மறுப்பு தெரிவித்து, தன்னுடையை கையெழுத்தை பயன்படுத்தி மோசடி நடந்துள்ளதாக வனிதா விஜயகுமாரும் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
 

பழம்பெரும் நடிகர் விஜயகுமார், முத்து கன்னு என்பவரை திருமணம் செய்து கொண்ட பின்னர், தன்னுடன் திரைப்படங்களில் நடித்த நடிகை மஞ்சுளா மீதும் காதல் வயப்பட்டார். இதன் பின்னர் முதல் மனைவி சம்மதத்துடன் மஞ்சுளாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவி மூலம் விஜயகுமாருக்கு 2 மகள் மற்றும் 1 மகன் உள்ளனர். விஜயகுமாரின் மகனான அருண் விஜய் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார். ஹீரோ என்கிற நிலையான இடத்தை பிடித்த பின்னரும், விஜய் சேதுபதி பாணியில் சில படங்களில் வெயிட்டான வில்லன் ரோலை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
 

விஜயகுமாரின் பிள்ளைகளில் வனிதா மட்டுமே தனி ரகம்

விஜயகுமார் குடும்பத்தில், அனிதா விஜயகுமாரை தவிர அவரின் பிள்ளைகள் அனைவரும் நடிகர்கள் என்றாலும், திருமணத்திற்கு பின்னர் மொத்தமாக திரையுலகில் இருந்து விலகி விட்டனர். ஆனால் இதில் வனிதா விஜயகுமார் மட்டும் தனி ரகம் எனலாம். திருமணத்திற்கு பின்னர் திரையுலகை விட்டு விலகினாலும், விவாகரத்துக்கு பின்னர் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த துவங்கினார். அந்த வகையில் இவர் தயாரித்து ஹீரோயினாக நடித்த 'எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல்' திரைப்படம் படு தோல்வியை சந்தித்தது.
 

வனிதா விஜயகுமார் - ராபட்டுக்கு சுப முகூர்த்தம் குறிச்சாசு; திருமண கோலத்தில் வெளியிட்ட தகவல்!

பிக்பாஸ் மூலம் கிடைத்த சினிமா வாய்ப்பு

இந்த படம் இவருக்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்திய நிலையில், சொந்த வாழ்க்கையிலும் தன்னுடைய தந்தை மற்றும் குடும்பத்தினரால் பல பிரச்சனைகள் எதிர்கொண்டார். மீண்டும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 2  நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வத்தி குச்சி வனிதா அடுத்தடுத்து சில திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடிக்க துவங்கினார். 
 

இயக்குனராக மாறிய வனிதா விஜயகுமார்

இந்நிலையில், வனிதா விஜயகுமார் இப்போது இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ள திரைப்படம் தான் 'Mrs and Mr' திரைப்படம். இந்த படத்தில் வனிதாவுக்கு ஜோடியாக டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் நடித்துள்ளார். அதாவது 40 வயதுக்கு மேல் திருமணம் செய்து கொள்ளும் ஒரு ஜோடிக்கு குழந்தை பெற்றுக்கொள்வதில் நடக்கும் பிரச்சனை தான் இந்த படம் என்பது டீசரை பார்த்தபோது தெரிந்தது. 

பப்பில் செம்ம வைப் மோடில் வனிதா விஜயகுமார்; ரசிகர்களுடன் எடுத்த செல்ஃபி போட்டோஸ்!

 

காசோலை மோசடியில் ஈடுபட்டதாக வனிதா மீது புகார்

இந்நிலையில் வனிதா மீது, தன்ராஜ் என்பவர்... அவர் காசோலை மோசடியில் ஈடுபட்டதாக கூறியுள்ளார். Mrs & Mr படத்திற்கு  சாட்டிலைட் உரிமைக்காக 40 லட்சம் ரூபாய் காசோலை கொடுத்து வனிதா ஏமாற்றிவிட்டதாக அவர் புகார் அளித்திருக்கிறார். ஆனால் வனிதா தரப்பில் அந்த நபர் யாரென்றே எனக்கு தெரியாது என்றும், தன்னுடைய கையெழுத்தை போலியாக பயன்படுத்தி இந்த வழக்கு தொடரப்பட்டு இருப்பதாகவும் வனிதா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார் இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

Read Entire Article