ARTICLE AD BOX
Vani Bhojan: தப்பா பேசுனாங்க.. கூட இருந்து பாத்தியா? விளாசிய வாணி போஜன்!
சென்னை: சன்தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வமகள்' சீரியல் மூலம் இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்து தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் தான் நடிகை வாணி போஜன். அந்த சீரியல் அவருக்கு பெரிய அளவில் அங்கீகாரத்தை பெற்றுத் தந்தது. அதன் பின் சினிமாவிற்கு வந்த வாணி போஜன், 'ஓ மை கடவுளே' நடித்தார். தொடர்ந்து, 'ராமே ஆண்டாலும், ராவண ஆண்டாலும், மிரள், அஞ்சாமை என பல வெற்றிப்படத்தில் நடித்து வரும் வாணி போஜன், இணையத்தில் பரவும் மோசமான செய்திக்கு பேட்டியில் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

கேள்வி: சினிமாவில் பெரிய ஹீரோயின் சின்ன ஹீரோயின் என்ற பாகுபாடு இருக்கா?
பதில்: நிச்சயமா இருக்குங்க ஆனால், ஏன் அந்த மாதிரி பாகுபாடு இருக்கு அப்படின்னு தெரியல இருந்தாலும் மிகப்பெரிய நடிகையாக வரணும்னா அதுக்கு நிச்சயமா ஒரு கடுமையான உழைப்பு தேவை. வெறும் நடிப்பை மட்டுமே நம்பி நடிச்சா பெரிய நடிகை ஆக முடியாது. அதுக்கான சில திறமைகளையும் நம்ம வளர்ந்துக் கொள்ள வேண்டும். கொஞ்சம் நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து சிறப்பாக நடித்தால், நிச்சயம் பெரிய நடிகையாக ஆகலாம் அதுமட்டுமில்லாமல் கொஞ்சம் லக்கும் வேண்டும்
வருகிற எல்லாப்படத்திலும் நடிக்கணும், நல்ல சம்பாதித்து கார், பங்களா வாங்கி செட்டில் ஆக வேண்டும் என்று நான் எப்போதும் நினைத்தது. இல்லை, எனக்கு தகுந்த கதைகளை தேர்வு செய்து தான் நடித்து வருகிறேன். அப்படித்தான் இயக்குனர் ஒருவர் போனில் எனக்கு ஒரு கதையை சொன்னார். அந்த கதையை கேட்டுவிட்டு இது எனக்கு செட் ஆகாது வேண்டாம் என்று கூறிவிட்டேன். அந்த கதையை அந்த இயக்குனர் ரித்திகா சிங்கிடம் சொல்லி இருக்கிறார். அது எனக்கு தெரியாது. அந்த கதையை கேட்ட ரித்திகா, ஓகே சொல்லிவிட்டார்.
சேன்ஸ் போச்சு: அப்பொழுது என்னுடைய தோழி ஒருவர் எனக்கு போன் செய்து, அந்த கதையை ஏன் வேண்டாம் என்று சொன்னாய், அது நல்ல கதை என்று சொன்னதும், நான் மீண்டும் இயக்குனருக்கு போன் போட்டு அந்த கதையை நேரடியாக கேட்டேன். அப்போ அவர், கதை சொன்ன விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தால் அந்த படத்திற்கு ஓகே சொல்லிவிட்டேன். அப்போதுதான், அந்த இயக்குநர், என்னிடம். இந்த கதை ரித்திகா சிங் நடிக்க வேண்டியது இன்னைக்கு அவர்களுக்கு செக் கொடுப்பேன் என்று சொன்னார். அப்போதுதான் என்னால ஒருத்தருக்கு சான்ஸ் போச்சே என்று நினைத்து அவரிடம் ரொம்ப வருத்தப்பட்டேன். இதே போல எனக்கும் பலமுறை நடந்து இருக்கிறது.
கூட இருந்து பார்த்தியா: கேள்வி: சோஷியல் மீடியாவில் வரும் மோசமான செய்திகள் கமெண்டுகளை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில் : சில நேரம் அதுபோன்று வரும் செய்திகளை பார்க்கும்போது மிகவும் ஆத்திரமாக தான் வரும்.என்னமோ கூடவே இருந்து பார்த்த மாதிரி பல விஷயங்களை தப்பா எழுதுவார்கள், பேசுவார்கள் அதைப்பார்க்கும் போது வருத்தமாகத்தான் இருக்கும். ஆனால், அதை எல்லாம் நான் கடந்து வந்து விட்டேன் எழுதுறியா... பேசுறியா பேசு நான் ஹேப்பியாகத்தான் என்றார்