திரையுலகில் சுமார் 15 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை எழுதி உள்ளவர் தான் கவிஞர் வாலி. அதுமட்டுமின்றி சத்யா, ஹே ராம், பார்த்தாலே பரவசம், பொய்க்கால் குதிரை உள்பட ஒரு சில படங்களில் நடித்தும் உள்ளார். சினிமாவில் இவரின் சிறந்த பங்களிப்புக்காக 2007ஆம் ஆண்டு, பத்ம ஸ்ரீ விருதும் வாலிக்கு வழங்கப்பட்டது. சினிமாவில் 3 தலைமுறை நடிகர்களுக்கு பாடல் எழுதியுள்ள இவரின் சாதனைகள் சொல்லில் அடங்காதவை.

இவர் எழுதிய ஹிட் பாடலால், உச்சாகம் அடைந்த அவரின் மனைவி நாகேஷ் உடன் இணைந்து அந்த பாடலுக்கு டான்ஸ் ஆடிய சம்பவம் தமிழ் சினிமாவில் அரங்கேறி இருக்கிறது. வாலியும் - நாகேஷூம் நெருங்கிய நண்பர்கள். 1965ஆம் ஆண்டு வாலி, ரமணி திலகம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். எம்ஜிஆர் காலத்தில் தொடங்கி இன்றைய தலைமுறை நடிகர்கள் வரையில் பலருக்கும் வாலி பாடல் எழுதி பல வெற்றி பாடல்களை கொடுத்துள்ளார்.

சினிமாவில் காதல், எமோஷன், பாடல்கள் மட்டும் அல்ல, இரட்டை அர்த்தங்களை சுட்டி காட்டி எழுதுவதிலும் வாலி வல்லவர் தான். வாலியின் வார்த்தை ஜாலத்திற்கு அவரின் மனைவி ரமணி திலகம் திருமணத்திற்கு முன்னர் இருந்தே தீவிரரசிகையாக இருந்துள்ளார். எம்ஜிஆரின் எங்க வீட்டு பிள்ளை படத்தில் இவர் எழுதிய குமரி பெண்ணின் உள்ளத்திலே பாடலுக்கு, விஸ்வநாதன் இசை பாடலை மெருகேற்றியது.

இந்த பாடல் பெரியளவில் ஹிட் கொடுக்கவே இந்த பாடலின் மூலமாக வாலிக்கு ரசிகையானவர் ரமணி. நாள்தோறும் வாலிக்கு கடிதமும் எழுதி வந்துள்ளார். அதில் குமரி பெண்ணின் உள்ளத்திலே பாடல் எனக்கு ரொம்பவே பிடித்தமானது. நான் உங்களை சந்திக்க வேண்டும். அது எப்போது என்று நீங்கள் சொல்ல வேண்டும் என்று கேட்டு கடிதம் எழுதியுள்ளார். அதற்கு நாளை நீங்கள் சந்திக்கலாம் என்று வாலி பதில் எழுதியிருக்கிறார்.

அப்படி தான் வாலி மற்றும் ரமணி திலகம் இருவரும் சந்தித்து பேசியுள்ளனர். அதன் பிறகு இந்த சந்திப்பு மீண்டும் மீண்டும் நடந்துள்ளது. இதையடுத்து இந்த சந்திப்பு நட்பாக மாறி நாளடைவில் காதலாகவும் மாறியிருக்கிறது. கடைசியில் வாலி அந்த ரசிகையையே திருமணமும் செய்து கொண்டனர்.
இந்த நிலையில் தான் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் நாகேஷ் நடித்து வெளியான படம் தான் சர்வர் சுந்தரம். இந்தப் படத்தில் வரும், அவளுக்கென்ன அழகிய முகம் என்ற பாடலை வாலி எழுதி ஹிட் கொடுத்துள்ளார். இந்தப் பாடலுக்கு தான் நாகேஷ் உடன் இணைந்து வாலியின் மனைவி ரமணி திலகம் ஜாலியாக டான்ஸ் ஆடினாராம். இதனை வாலியும் பார்த்து ரசித்துள்ளார்.