Union Budget 2025: 'வானோக்கி வாழும் உலகெல்லாம்...' - திருக்குறளை மேற்கோள் காட்டிய நிர்மலா சீதாராமன்

3 hours ago
ARTICLE AD BOX

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் எட்டாவது பட்ஜெட் இதுவாகும்.

அவர் இதுவரை தாக்கல் செய்த பெரும்பாலான பட்ஜெட்டுகளில் திருக்குறள் அல்லது தமிழ் சங்க கால பாடல்களை மேற்கொள் காட்டியுள்ளார்.

அதுமாதிரி, இப்போது நடந்துகொண்டிருக்கும் மத்திய பட்ஜெட் தாக்கலில்,

"வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்

கோல்நோக்கி வாழுங் குடி." என்ற திருக்குறளை மேற்கோள் காட்டியுள்ளார்

இதன் பொருள், "வானத்தை எதிர்பார்த்தே வாழும் உலகைப்போல, மக்களும் மன்னனின் ஆணையை நோக்கி வாழ்வார்கள்" என்பதாகும்.

பட்ஜெட்டின் தொடக்கத்தில் தெலுங்கு எழுத்தாளர் குருஜாடா அப்பாராவ்வின் 'தேசமாண்டே...' என்ற பாடலை கூறி, அதன் விளக்கமான 'நாடு என்பது அதன் மண் அல்ல...மக்கள்' என்று மேற்கோள்காட்டினார்.

Read Entire Article