Union Budget 2025: 'மகிளா சம்மான் சேமிப்பு... கிரீச்' - பெண்களுக்கு என்ன வேண்டும்? நிபுணர் கருத்து

3 hours ago
ARTICLE AD BOX
ஒவ்வொரு மத்திய பட்ஜெட்டிலும் பெண்களுக்கான முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும். அப்படி இந்தப் பட்ஜெட்டில் என்ன அறிவிப்புகள் இருந்தால் பெண்களுக்கு உதவியாக இருக்கும் என்பதை கூறுகிறார் நிதி ஆலோசகர் சுந்தரி ஜகதீசன்.

"இந்திய மக்கள் தொகையில் பெண்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்கது. இந்திய பொருளாதாரத்திற்கு இவர்கள் பங்களிப்பு மிக முக்கியம். இன்னமும், தொழில்துறையில் பெண்களின் பங்களிப்பையும், எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும்.

அனைத்து பெண்களும் வேலைக்கு செல்கிறார்களா... தொழில்துறையில் இருக்கிறார்களா என்று கேட்டால், அது இல்லை தான். ஆனால், எல்லா பெண்களுக்கும் நிச்சயம் சேமிப்பு பழக்கம் உண்டு.

நிதி ஆலோசகர் சுந்தரி ஜகதீசன்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் 2023-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இது வரும் மே மாதத்தோடு நிறைவடைகிறது. இந்த சான்றிதழ் திட்டத்தின் மூலம் பெண்களுக்கு 7 சதவிகித வட்டியில் ரூ.2 லட்சம் கிடைக்கும். இதை மீண்டும் நீட்டிக்கலாம். இது பெண்களை சேமிப்பிற்கு பெரிதும் உதவும்.

கிரீச்(Creche), திறன் வளர்ப்பு, பணிக்கு செல்லும் பெண்களுக்கு ஹாஸ்டல் என்று பெண்களுக்கு என பல திட்டங்கள் கொட்டிக்கிடக்கின்றன. அதுக்குறித்த விழிப்புணர்வுகளை மக்களிடம் கொண்டுவர வேண்டும். மேலும், அவற்றை முழுவதுமாக செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெண்களை தொழில்முனைவுகளில் ஊக்குவிக்க புதிய கடன்திட்டங்களை கொண்டுவரலாம். பெண்களுக்கான வேலைவாய்ப்புகளையும் அதிகரிக்க வேண்டும்" என்று விளக்கினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Read Entire Article