தமிழக வெற்றிக் கழகம் கட்சியின், மாவட்ட பொருளாளர், இணைச் செயலாளர், துணைச் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளை, நேர்காணல் மூலம் தேர்வு செய்து, நியமன படிவத்தை வழங்கினார், தவெக தலைவர் விஜய். மேலும், அவர்களுக்கு வெள்ளி நாணயத்தையும் பரிசாக வழங்கினார்.

நிர்வாகிகளுடன் விஜய் நேர்காணல்:

தமிழ்நாட்டில் , அடுத்த வருடம் சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கட்சியை பணியை வேகப்படுத்தும் வகையில், கட்சி நிர்வாகிகளை நியமிக்கும் பணியில் விஜய் இறங்கியுள்ளார்.

இந்நிலையில், இன்று சென்னை பனையூரில் கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 19 மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, அவர்களை நேர்காணம் செய்து, கட்சி திட்டங்கள் குறித்து ஆலோசனை செய்து, நிர்வாகிகளை நியமனம் செய்தார். இக்கூட்டத்தில், மாவட்ட நிர்வாகிகளுடன், தனித்தனியாக ஆலோசனை நடத்தினார். அப்போது, ஒவ்வொரு நிர்வாகிகளிடம், சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் வரை ஆலோசனை நடத்தியிருக்கிறார்.

நிர்வாகிகள் நியமனம்

தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில், அதை 120 மாவட்டங்களாக பிரித்து, தவெக நிர்வாகிகளை நியமனம் செய்யும் முடிவை விஜய் எடுத்துள்ளார். ஒரு மாவட்டத்திற்கு ஒரு மாவட்ட செயலாளர், ஒரு மாவட்ட பொருளாளர், ஒரு இணை செயலாளர், 2 துணை செயலாளர் மற்றும் 10 நியமன உறுப்பினர்களும் நியமிக்கப்படும் வகையிலான முடிவை எடுத்திருக்கிறார்.

அதன் , முதற்கட்டமாக, 19 மாவட்டங்களுக்கான மாவட்ட பொருளாளர், இணை செயலாளர், துணை செயலாளர் மற்றும் நியமன உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இக்கூட்டத்தில் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு , விஜய் உருவம் கொண்ட, வெள்ளி நாணயம் பரிசாக வழங்கப்பட்டிருக்கிறது.

வாழ்த்து தெரிவித்த விஜய்:

இந்நிலையில், முதற்கட்டமாக 19 மாவட்ட நிர்வாகிகள் பட்டியலை, தவெக தலைவர் வெளியிட்டுள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது, “

தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டு, கழகப் பணிகளைத் துரிதமாக மேற்கொள்ள, கழகமானது அமைப்பு ரீதியாக, சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி 120 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 19 கழக மாவட்டங்களுக்கு, கழக விதிகளின்படி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் புதிய நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என விஜய் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டு, கழகப் பணிகளைத் துரிதமாக மேற்கொள்ள, கழகமானது அமைப்பு ரீதியாக, சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி 120 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 19 கழக மாவட்டங்களுக்கு, கழக விதிகளின்படி மாவட்டப் பொறுப்பாளர்கள்…

— TVK Vijay (@tvkvijayhq) January 24, 2025

19 மாவட்ட நிர்வாகிகள் பட்டியல்:

கரூர் மேற்கு மாவட்ட செயலாளராக வி.பி. மதியழகன், கோவை மாநகர் மாவட்ட செயலாளராக வி.சம்பத்குமார் அரியலூர்-சிவகுமார், ஈரோடு மாநகர்-பாலாஜி, கள்ளக்குறிச்சி-பரணி பாலாஜி, சேலம் மத்திய மாவட்டம்-பார்த்திபன் உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

19 மாவட்டத்திற்கான, அனைத்து நிர்வாகிகளின் பெயர் விவரங்களை தெரிந்து கொள்ள, இந்த லிங்க்கை கிளிக் செய்யவும். 19 மாவட்ட தவெக நிர்வாகிகள் பட்டியல்

பின்னர், எந்த மாவட்டத்திற்கான நிர்வாகிகள் விவரங்களை, தெரிந்து கொள்ள வேண்டுமோ, அந்த மாவட்டத்தின் மீது கிளிக் செய்யவும்.

இதையடுத்து மாவட்ட நிர்வாகிகள் படிவம் பதிவிறக்கமாகிவிடும்.

அதன் மூலம், படிவத்தை பார்த்து, நிர்வாகிகளின் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.