ARTICLE AD BOX
அமெரிக்காவின் அதிபராகப் பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து சர்ச்சைகளை உருவாக்கும் விதமாக செயல்பட்டு வருகிறார். பிரதமர் மோடி அமெரிக்காவில் இருக்கும்போதே இந்திய ஆவணமற்ற குடியேறிகளை விலங்கிட்டு அனுப்பியதில் தொடங்கி கனடா, மெக்சிகோ, கொலம்பியா போன்ற நாடுகளின் பொருள்களுக்கு வரிகளை அதிகப்படுத்தியது, காஸாவை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் கொண்டுவர திட்டமிட்டது, உக்ரைன் அதிபரை சர்வாதிகாரி என விமர்சித்தது, மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடா எனப் பெயர் மாற்றியது உள்ளிட்டப் பல்வேறு பல்வேறு நாடுகளின் விவகாரங்களில் தலையிட்டு சிக்கல்களை ஏற்படுத்தி வருகிறார். அதன் ஒருபகுதியாக தற்போது அவரின் டரூத் வலைபக்கத்தில் ஏஐ வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
GOLDEN AGE Trump shares AI video of his vision for Gaza —
Pres Trump shared video on TS -“Scenes of destruction suddenly morph into a sunny beach resort destination, as a lively dance track with the lyrics “Donald Trump will set you free, bringing the life for all to see, no… pic.twitter.com/jR1pHHWVPf
அதில், அமெரிக்கா காஸா பகுதியை சொந்தமாக்க வேண்டும் என்ற அவரது திட்டத்தைப் பிரதிபலிப்பதாகத் தெரிகிறது. அந்த வீடியோவில், காஸா 2025 அடுத்து என்ன? என்ற வரிகளுடன் தொடங்கும் வீடியோவில், குழந்தைகள் ஒரு சுரங்கப்பாதையிலிருந்து வானளாவிய கட்டிடங்களின் ஒரு பகுதிக்குள் நுழைகிறார்கள். "ட்ரம்ப் காஸா" என்று பெயரிடப்பட்ட ஹோட்டல்கள், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் அவர் ட்ரம்ப் அமர்ந்து சாப்பிடுவது, எலான் மஸ்க் முதலீடு செய்து மகிழ்ச்சியாக இருப்பது, சில ஆண்கள் பெண்கள் வேடமிட்டு நடனமாடுவது, வானளாவிய ட் ரம்பின் தங்க நிற சிலை, திரும்பும் இடமெல்லாம் ட் ரம்ப் இருக்கும்படியான காட்சியமைப்புகளுடன் அந்த வீடியோ வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
அந்த வீடியோவுக்கு பின்னணியில் ஒலிக்கும் பாடலின் வரிகளில், ``இனி சுரங்கப்பாதைகள் இல்லை, இனி பயம் இல்லை. ட்ரம்ப் காஸா இறுதியாக வந்துவிட்டது" என்ற வார்த்தைகள் இடம்பெற்றிருக்கிறது. ஏற்கெனவே ட் ரம்பின் காஸாவை சொந்தமாக்கும் முடிவுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், இந்த வீடியோவுக்கும் கண்டனங்கள் வலுத்து வருகிறது.
Trump : `ஜெலன்ஸ்கி சர்வாதிகாரி..!' - உக்ரைன் அதிபருக்கு எதிராக திரும்பும் ட்ரம்ப் - என்ன நடக்கிறது?Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
