Top 10 News: ரயில் இன்ஜின் டிரைவர்கள் இளநீர் சாப்பிட தடையா? ட்ரம்ப் கேட்ட கேள்வி - டாப் 10 செய்திகள்

2 days ago
ARTICLE AD BOX

1,000 முதல்வர் மருந்தகங்களைத் திறந்து வைக்கிறார் ஸ்டாலின்

பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகளை விற்பனை செய்யும் வகையில் தமிழ்நாடு முழுவதும் நாளை (பிப்.24) முதல்வர் மருந்தகங்கள் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார். சென்னையில் 33 இடங்கள் உள்பட 1,000 'முதல்வர் மருந்தகங்கள்' திறக்கப்படவுள்ளன. ஜெனரிக் மருந்துகள், சர்ஜிக்கல், சித்தா, ஆயுர்வேதம், யுனானி உள்ளிட்ட அனைத்து மருந்துகளும் 20 முதல் 90% வரை தள்ளுபடி விலையில் கிடைக்க நடவடிக்கை

சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை

கன்னியாகுமரி மாவட்டம் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை இன்று பிற்பகல் 2.00 மணி முதல் இரவு 12 மணி வரை கடல் கொந்தளிப்பாக காணப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், கடற்கரை பகுதிக்குச் செல்வதை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள்

மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித்!

'Porsche Sprint Challenge' பந்தயத்தின் 6வது சுற்றில் அஜித் குமார் கார் |விபத்துக்குள்ளான வீடியோ வெளியாகி அதிர்ச்சி. காயமின்றி வெளியே வந்து கை அசைத்தார். அவர் எந்த தவறும் செய்யவில்லை. மற்ற போட்டி கார்களினால் 2 முறை விபத்தில் சிக்கினார் என்பது வெளியான வீடியோக்கள் |தெளிவுபடுத்துவதாக அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம்

சுரங்க விபத்து - 8 பேரை மீட்கும் பணி தீவிரம்

தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டம் அம்ராபாத்தில் உள்ள ஸ்ரீசைலம் அணையின் தண்ணீர் குழாயில் கசிவு ஏற்பட்டது. இந்த கசிவை சரிசெய்ய நேற்று மாலை தொழிலாளர்கள் 8 பேர் சுரங்கதம் வழியாக உள்ளே சென்றபோது  சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அந்த இடிபாடுகளில் சிக்கிய 8 பேரை மீட்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

தர்மேந்திர பிரதான் மீண்டும் வலியுறுத்தல்

வளர்ந்த இந்தியா' என்ற இலக்கை அடைய தேசிய கல்விக் கொள்கையை வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டும் என்று மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். பிரதமர் மோடி, இந்தியாவை 'வளர்ந்த இந்தியா'வாக மாற்ற தேசிய கல்விக் கொள்கையை வகுத்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.

ரயில் இன்ஜின் டிரைவர்கள் இளநீர் சாப்பிட தடையா?

திருவனந்தபுரம் கோட்டத்தில் ரயில் என்ஜின் டிரைவர்களை பரிசோதித்தபோது அவர்கள் மது அருந்தியுள்ளதாக முடிவு வந்தது. ரத்த பரிசோதனை செய்தபோது ஆல்கஹால் இல்லை என தெரியவந்தது. இன்ஜின் டிரைவர்களில் சிலர் இளநீரோ, ஹோமியோ மருந்தோ அல்லது சில பழ வகைகளையோ சாப்பிட்டதாக தெரிவித்தனர். இதனால் இன்ஜின் டிரைவர்கள் பணிக்கு வருவதற்கு முன் இளநீர், ஹோமியோ மருந்து மற்றும் சில பழ வகைகளை சாப்பிடக்கூடாது என்று திருவனந்தபுரம் கோட்ட எலக்ட்ரிக்கல் பொறியாளர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவுக்கு பல்வேறு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது.

ட்ரம்ப் கேள்வி

அமெரிக்கப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட அதிக வரிகளால் இந்தியா ஏற்கனவே பயனடைந்து வரும் நிலயில், அமெரிக்கா ஏன் இந்தியாவுக்கு தேர்தல் உதவி வழங்குகிறது என்று அதிபர் டிரம்ப் கேள்வி

போப் பிரான்சிஸ் உடல்நிலையில் பின்னடைவு

போப் பிரான்சிஸ் (88) உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக தகவல். நிமோனியா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். இந்த வாரம் அவர் பங்கேற்க இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அரையிறுதிக்கு முன்னேறுமா இந்தியா?

சாம்பியன்ஸ் டிராபியின் இன்றைய முக்கியமான ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்திய அணி. A பிரிவில் வங்கதேசத்தை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ள இந்தியா இன்று வெற்றி பெற்றால் அரையிறுதி வாய்ப்பை உறுதியாகிவிடும்.

சாதனை படைத்த ஆஸ்திரேலியா

ஐசிசி தொடர்களில் (50 ஓவர்) அதிக ரன்களை சேசிங் செய்த அணி என்ற புதிய சாதனை படைத்தது ஆஸ்திரேலியா! சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா. ஆஸி., vs இங்கி., - 352 runs I பாக்., vs இலங்கை - 345 runs I அயர்லாந்து vs இங்கி., - 329 runs

Read Entire Article