Top 10 News: ”சமஸ்கிருத மொழியின் முகமூடி இந்தி".. வெளியேறிய இங்கிலாந்து - டாப் 10 செய்திகள்

3 hours ago
ARTICLE AD BOX

கட்டுக்குள் கொண்டுவர முடியாத காட்டுத்தீ

தேனி வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த வனத்துறை மற்றும் தீயணைப்புத்துறை அதிகாரிகள் இணைந்து ஆலோசனை. கரடுமுரடான பாதைகளைக் கொண்ட மலைப்பகுதி என்பதால் தீயைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாத சூழ்நிலை உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் விளக்கம்.

விடுதலையான தமிழக மீனவர்கள்

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் மற்றும் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த 27 மீனவர்கள், இலங்கையிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்! தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள், சென்னை விமான நிலையத்தில் மீனவர்களை வரவேற்று, அரசு ஏற்பாடு செய்த வாகனங்கள் மூலம் அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தங்கத்தில் கழிவறை:

இங்கிலாந்தின் பிளென்ஹெய்ம் அரண்மனையில் ₹53 கோடி மதிப்புள்ள தங்கக் கழிவறை இருக்கையை திருடியவர்களில் ஒருவர் பிடிபட்டார்.கடந்த 2019ல் நடந்த கலை கண்காட்சியில் நடந்த திருட்டு சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி நீதிமன்றத்தில் ஒப்படைப்பு. 5 பேர் திருட்டில் ஈடுபட்ட நிலையில் ஜேம்ஸ் ஷீன் என்பவர் மட்டும் பிடிபட்டுள்ளார். இந்த தங்கம் இதுவரை மீட்கப்படவில்லை.

தீ விபத்து:

தாராபுரம் பேருந்து நிலையம் அருகே, பாத்திரக் கடை முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ₹10 லட்சம் மதிப்பிலான கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு. தீ பரவியதால் கடையிலிருந்த இரு வாகனங்கள் உட்பட 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி நாசம் - போலீஸ் விசாரணை

ஆப்கானிஸ்தான் வெற்றி:

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2 போட்டிகளிலும் தோல்வியடைந்த இங்கிலாந்து அணி தொடரில் இருந்து வெளியேறியது.நேற்று நடந்த போட்டியில் இங்கிலாந்து அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது ஆப்கானிஸ்தான்.

காலாவதியான அரசியல்வாதிகள்

சினிமாவில் காலாவதியான காலத்தில் அரசியலுக்கு வந்து அங்கீகாரம் பெறுகின்றனர்; சினிமாவில் நன்றாக சம்பாதித்துவிட்டு சொகுசாக வாழ்ந்து அரசியலுக்கு வருகிறார்கள்.நான் 35 ஆண்டுகள் உழைத்த பிறகே விசிக அங்கீகாரம் பெற்ற கட்சியாய் மாறியிருக்கிறது; அரசியலுக்கு வரும் நடிகர்கள் ஊர் ஊராய் செல்லத் தேவையில்லை என்ற சொகுசு இருக்கிறது - விசிக தலைவர் திருமாவளவன்.

”சமஸ்கிருத மொழியின் முகமூடி இந்தி"

"முகமூடி இந்தி, அதற்குள் ஒளிந்திருக்கும் முகம் சமஸ்கிருதம்; எந்த மொழியை வேண்டுமானாலும் படிக்கலாம் என்று ஒரு தினுசாக பேசுகின்றனர்"தமிழர் பண்பாட்டை அழிக்க பன்னெடுங்காலமாக படையெடுக்கும் இனப்பகைவர் சூழ்ச்சி முறியடிப்பு - திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம்.

மக்கள் தொகையை குறைத்த தமிழ்நாட்டிற்கு தண்டனையா?"

"சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தொகுதிகள் வரையறுக்கப்பட்டால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு"நீட் போன்ற பிரச்னைகள் நாடாளுமன்றத்தில் வரும்போது தமிழ்நாட்டிற்கு பாதிப்பு ஏற்படும் - திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பேட்டி.

தோனி ஓய்வு?

2025 IPL தொடருக்குத் தயாராக சென்னை வந்த எம்.எஸ்.தோனி Morse Code- 'One Last Time' பொறிக்கப்பட்ட T-Shirt அணிந்து வந்துள்ளார்.

கிரிக்கெட் மைதானத்திற்கு ஒப்புதல்:

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் -தடையில்லா சான்று வழங்கிய இந்திய விமான நிலைய ஆணையம் ஒண்டிப்புதூரில் திறந்தவெளிச் சிறைச்சாலை இயங்கி வரும் இடத்தில் 20.72 ஏக்கரில் கிரிக்கெட் மைதானம்.

Read Entire Article