”வீட்டிற்கே வரும் ரேஷன் பொருட்கள்” - அமைச்சர் சக்ரபாணி

"ஆந்திராவில் வீட்டிற்கே சென்று ரேஷன் கடை பொருட்களை வழங்கும் திட்டம் உள்ளது. வரும் 20ம் தேதி ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். அதனை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்குவது குறித்து முதலமைச்சரிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்" - சட்டப்பேரவையில் அமைச்சர் சக்கரபாணி தகவல்

மீண்டும் எகிறிய தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.66,320க்கு, கிராம் ரூ.8,290க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து, ரூ.114-க்கு விற்பனையாகிறது. இது வெள்ளி வரலாற்றில் இதுவரை இல்லாத உச்சமாகும்.

தனியார் மயமாகும் திருச்சி விமான நிலையம்?

திருச்சி விமான நிலையத்தை தனியாருக்கு குத்தகை விட அடையாளம் காணப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல். விமான நிலையங்கள் தனியார் மயமாக்கல் தொடர்பான கேள்விக்கு திருச்சி, அமிர்தஸரஸ், வாரணாசி, ராஜமந்திரி உள்ளிட்ட 11 விமான நிலையங்கள் பொது-தனியார் (PPP) கூட்டாண்மை அடிப்படையில் குத்தகைக்கு விட அடையாளம் | கண்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்துத்துறை பதில்’

ராகுல் காந்தி கோரிக்கை

வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைக்கும்போது ஏழைகள் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குரிமை எக்காரணம் கொண்டும் பறிபோக கூடாது என இந்திய தேர்தல் ஆணையத்திற்கு மக்களைவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தல். போலி வாக்காளர்கள் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், புதிய சீர்திருத்தங்களை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் முடிவு

22ம் தேதி மணிப்பூர் செல்லும் உச்சநீதிமன்ற நீதிபதிகள்..!

மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள |நிவாரண முகாம்களைப் பார்வையிட, பி.ஆர்.கவாய், சுந்தரேஷ், சூர்யகாந்த், கே.வி.விஸ்வநாதன், விக்ரம்நாத், கோடீஸ்வர் சிங்| ஆகிய 6 உச்சநீதிமன்ற நீதிபதிகள் மணிப்பூர் செல்கின்றனர். இந்த பயணத்தின்போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு சட்ட உதவிகளை வழங்குவதற்கான முகாம்கள் மற்றும் மருத்துவ முகாம்களை தொடங்கி வைக்க உள்ளனர். இந்த முன்னெடுப்பை காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது.

புலி சுட்டுக்கொலை

கேரளா: இடுக்கி மாவட்டம் வண்டிப் பெரியார் அருகே மக்களை அச்சுறுத்தி வந்த புலியை பிடிக்க முயன்றபோது தாக்க முயன்றதால் சுட்டுப் பிடித்த வனத்துறை அதிகாரிகள். புலி உயிரிழந்தது.

பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்

9 மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கித் தவித்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் SpaceXன் 'ட்ராகன்' விண்கலம் மூலம் 17 மணிநேர பயணத்திற்குப் பிறகு பத்திரமாக பூமிக்கு திரும்பினர். புளோரிடா கடற்பகுதியில் இறங்கிய விண்கலத்தில் இருந்து சுனிதா, புட்ச், நிக் ஹேக், அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகிரு 4 விண்வெளி வீரர்கள் பத்திரமாக வெளியே அழைத்து வரப்பட்டு, மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

முடிவுக்கு வரும் உக்ரைன் - ரஷ்யா போர்

உக்ரைன் உடனான போரை 30 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்க ரஷ்ய அதிபர் புதின் ஒப்புதல் -அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்!. ட்ரம்ப் மற்றும் புதினும் போர் நிறுத்தம் தொடர்பாக இரண்டரை மணி நேரம் தொலைபேசியில் உரையாடினர். அமெரிக்கா மற்றும் அதனுடைய நட்பு நாடுகளும் உக்ரைனுக்கு ராணுவம், உளவுத் தகவல்களை வழங்குவதை நிறுத்த வேண்டும் என ட்ரம்பிடம் புதின் கோரிக்கை.

காத்துக்கிடக்கும் ரசிகர்கள்

ஐபிஎல் தொடரில் வரும் 23ம் தேதி நடைபெற உள்ள மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கு இடையேயானபோட்டி நடைபெற உள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது. ஆன்லைனில் சுமார் 2.8 லட்சம் பேர் டிக்கெட் வாங்க காத்திருக்கின்றனர்.

பேட்டிங் ஆர்டரை மாற்ற கே.எல்.ராகுல் முடிவு?

நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக 4வது வீரராக கே.எல்.ராகுல் களமிறங்க உள்ளதாக தகவல். ஹாரி ப்ரூக் விலகிய நிலையில் நடுவரிசையை பலப்படுத்த முடிவு. லக்னோ அணியின் கேப்டனாக விளையாடி வந்த கே.எல்.ராகுலை இந்தாண்டு ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது டெல்லி அணி