ARTICLE AD BOX
Top 10 Cinema: குட் பேட் அக்லி படத்தின் அப்டேட் கொடுத்து அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்திய ஜி.வி. பிரகாஷ் முதல் போலி செய்திகளுக்கு எதிராக விளக்கமளித்த தனுஷ் வரை இன்றைய டாப் 10 சினிமா செய்திகளைப் பார்க்கலாம்.
1. குட் பேட் அக்லியில் சிம்ரன்?
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார்- த்ரிஷா நடித்து வரும் திரைப்படம் குட் பேட் அக்லி. இந்தப் படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் முடிவடைந்ததாக கூறப்படும் நிலையில், தற்போது இந்தப் படத்தில் சிம்ரன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அத்துடன் குட் பேட் அக்லி படத்தில் வாலி படத்தின் காட்சிகள் இடம் பெற உள்ளதாகவும் கூறி வருகின்றனர்.
2. தனுஷ் பெயரில் மோசடி
நடிகர் தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ், நிறுவனம் சார்பில் புதிதாக படம் எடுப்பதாகவும், அந்தப் படத்திற்காக புதுமுக நடிகர்கள் தேடப்பட்டு வருவதாகவும் போலி விளம்பரங்கள் வெளியாகின. இதையடுத்து, வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் இதுகுறித்து விளக்கமளித்துள்ளது. சமூக வலைதளங்களில் வெளியாவது அனைத்தும் போலியான தகவல்கள் எனவும் கூறியுள்ளது. இதை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.
3. தீயாய் வேலை செய்யும் ஜி.வி. பிரகாஷ்
நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் அப்டேட் தருமாறு ரசிகர்கள் ஜி.வி. பிரகாஷை தொடர்ந்து தொந்தரவு செய்து கொண்டிருக்கும் நிலையில், குட் பேட் அக்லி படத்திற்காக தீயாய் வேலை செய்து கொண்டிருக்கிறேன். அதை விரைவில் பார்ப்பீர்கள் எனக் கூறியிருக்கிறார். அதே சமயம், தயாரிப்பு நிறுவனம் சார்பில் கொஞ்ச நாள் பொறு தலைவா என சூசகமான பதிலும் வந்துள்ளது. இதனால், அஜித் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.
4. மேலும் 5 மொழிகளில் புஷ்பா2!
அல்லு அர்ஜூன் சினிமா வரலாற்றை தூக்கி நிறுத்திய படமாக அமைந்துள்ளது புஷ்பா 2. சுகுமார் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் 1000 கோடிக்கு மேல் வசூலித்து ஹிட் மேல் ஹிட் அடித்ததுடன், பல வெளிநாட்டு மக்களையும் கவர்ந்துள்ளது. இதன் காரணமாக புஷ்பா 2 திரைப்படத்தை போர்ச்சுகீஸ், இந்தோனிஷியா, போலீஷ், ஸ்பானிஷ், மற்றும் தாய் மொழிகளில் வெளியிட்டுள்ளது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம். இதனால் புஷ்பா படத்திற்கான பார்வையாளர்கள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு.
5. எதிர்பார்ப்பை தூண்டும் சுழல் 2
புஷ்கர் காயத்ரி எழுத்தில் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள இணையத் தொடர் சுழல். அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியான இந்த கிரைம் திரில்லர் தொடர் மக்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட நிலையில், தற்போது இந்தத் தொடரின் 2ம் பாகம் வரும் பிப்ரவரி 28ம் தேதி வெளியாகிறது. இதனை முன்னிட்டு இன்று இணைய தொடரின் டிரெயிலர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
6. சர்தார் 2 ரிலீஸ் எப்போது?
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் படம் சர்தார் 2. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்ட நிலையில், சர்தார் 2 படத்தின் ரிலீஸ் குறித்த கருத்துகள் சமூக வலைதளங்களில் வெளிவரத் தொடங்கியுள்ளது. அதன்படி, சர்தார் 2 வரும் ஜூலை மாதத்தில் ரிலீஸ் ஆக அதிகளவில் வாய்ப்புள்ளதாகவும், இதன் காரணமாக, படம் எடுக்கும் போதே எடிட்டிங் பணிகள் எல்லாம் செய்யப்படுவதாகவும் கூறி வருகின்றனர். ஆனால், இது குறித்து படக்குழு எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை.
7. ரீ- ரிலீஸ் செய்யப்படம் ஆட்டோகிராப்
நடிகர் சேரன் இயக்கத்தில் வெளியாகி பலரது மனதையும் தொட்ட படம் ஆட்டோகிராப். இந்தப் படம் இப்போது டிவியில் போட்டாலும் பார்ப்பதற்கு என ரசிகர்கள் உள்ளனர். அப்படிப்பட்ட படம் வெளியாகி தற்போது 21 ஆண்டுகள் நிறைவடையப் போகிறது என்றால் நம்பவா முடிகிறது. 2004ல் வெளியான இந்தப் படம் மக்கள் மனதை வென்றதுடன் ஒரே சமயத்தில் 3 தேசிய விருதுகளையும் வென்றது. இந்நிலையில், படத்தின் 21ம் ஆண்டை முன்னிட்டு அதனை ரீ- ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இருப்பினும், வெளியீட்டு தேதியை இன்னும் அறிவிக்கவில்லை.
8. வெளியானது சப்தம் பட டிரெயிலர்
ஈரம் படம் மூலம் ரசிகர்களை கட்டிப்போட்டவர் இயக்குநர் அறிவழகன். இவர் தற்போது, ஈரம் படத்தை தொடர்ந்து ஆதியுடன் இணைந்து சப்தம் எனும் படத்தை இயக்கி வருகிறார். ஹாரர் திரில்லர் படமான சப்தம் வரும் பிப்ரவரி 28ம் தேதி வெளியாகும் நிலையில், படத்தின் டிரெயிலர் இன்று வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் லட்சுமி மேனன், சிம்ரன், லைலா, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
9. கும்பமேளாவில் ரிலீஸாகும் தமன்னா பட டீசர்
நடிகை தமன்ன, தமிழ் , தெலுங்கு என தென்னிந்திய படங்களிலும், ஹிந்தி படங்களிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், தெலுங்கில் வெளியாகி ஹிட் அடித்த ஒடேலா எனும் படத்தின் 2ம் பாகத்தில் அவர் நடித்து வருகிறார். அசோக் தேஜா இயக்கும் இந்தப் படத்தின் டீசர் வெளியீடு குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, தமன்னா படத்தின் டீசர் வரும் 22ம் தேதி கும்பமேளா நடைபெறும் பிரக்யாராஜ் நகரில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
10. இயக்குநரான டைட்டானிக் நாயகி
டைட்டானிக் படம் மூலம் உலக ரசிகர்களை தன் வசம் இழுத்தவர் கேட் வின்ஸ்லட். இவர், ஹாலிவுட்டில் பல ஹிட் படங்களை கொடுத்து அசத்தி உள்ளார். இந்நிலையில், அவர் குட்பை ஜூன் எனும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். அத்துடன் இந்த படத்தை அவரே தயாரிக்கவும் செய்துள்ளார். மேலும், இந்தப் படத்தை நெட்பிளிக்ஸ் தளத்தில் நேரடியாகவும் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
