ARTICLE AD BOX
Today Rasi Palan 23 February 2025: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப ரொம்ப முக்கியமான நாளாக இருக்குமாம்...
Today Rasi Palan: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நிலை ஆகியவற்றால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் இருக்கும்.
அதுவும் இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 23 ஆம் தேதி ஞாயிறுக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மிகவும் சாதாரணமான நாளாக இருக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். உங்கள் வேலைகளை பொறுமையுடனும், தைரியத்துடனும் கையாளுங்கள். புதிய வணிகத் திட்டங்களுக்கு நிபுணர்களின் ஆலோசனை கேட்பது நன்மை பயக்கும். நீங்கள் புதிய சொத்தில் முதலீடு செய்யலாம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இன்று பரபரப்பான நாளை அனுபவிப்பார்கள். வேலை தொடர்பான பொறுப்புகள் உங்களை மிகவும் பிஸியாக வைத்திருக்கும். காதல் வாழ்க்கையில் சில ஏமாற்றங்கள் ஏற்படலாம். பண விஷயங்களில் மிகவும் கவனமாக இருங்கள். கடந்த கால மனக்குறைகளை மீண்டும் நினைத்துப் கவலைப்படுவதைத் தவிர்க்கவும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று மிகவும் சாதகமான நாளாக இருக்கும். உங்களைச் சுற்றி இனிமையான சூழல் நிறைந்திருக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகளும், கூடுதல் பொறுப்புகளும் வரக்கூடும். திருமணமாகாத நபர்கள் முக்கியமான ஒருவரை சந்திக்க நேரிடும். குடும்பத்தில் உற்சாகமான சூழல் நிலவும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று பொறுமையுடன் காரியங்களை கையாள வேண்டும். ஆன்லைன் வேலை செய்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வாழ்க்கைத் துணையுடன் சேமிப்பு பற்றிய விவாதங்கள் நடக்கலாம். குழந்தைகளின் எதிர்காலம் குறித்த கவலைகள்அதிகரிக்கலாம். எதற்காகவும் மற்றவர்களிடம் கடன் வாங்கித்தீர்கள். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் பிங்க்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இன்று தங்கள் தலைமைத்துவ குணத்தால் சிறப்பான பலன்களை அடைவார்கள். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். வியாபாரிகள் பெரிய லாபத்தை எதிர்பார்க்கலாம். உணவுமுறையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். உங்கள் வாழ்க்கைத்துணையுடனான உறவுகள் மேம்படும். வெளியாட்களுடன் முக்கியமான தகவல்களைப் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்கவும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் நீலம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இன்று மிகவும் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். மாணவர்கள் படிப்பில் சிறப்பாகச் செயல்படுவார்கள். அறிவை வளர்த்துக் கொள்வது நன்மை பயக்கும். புதிய செயல்பாடுகளில் ஆர்வம் உருவாகலாம். உங்களைச் சுற்றியுள்ளவர்களை கண்மூடித்தனமாக நம்புவதைத் தவிர்க்கவும். வியாபாரிகளுக்கு நிலுவையில் உள்ள ஒரு ஒப்பந்தம் இறுதி செய்யப்படும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று கலவையான நாளாக இருக்கும். வேலையில் இருப்பவர்கள் இன்று மிகவும் கவனமாக இருக்க வேண்டும், மேலதிகாரிகள் உங்களை முழுமையாக ஆதரிப்பார்கள். உங்கள் வேலையை சரியாக திட்டமிடுங்கள். குடும்பத்தில் மூத்த உறுப்பினரின் ஆலோசனை படி நடந்து கொள்வது நல்லது. பழைய நண்பர்களை மீண்டும் சந்திப்பது மகிழ்ச்சியைத் தரும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் மெரூன்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இன்று எந்தவொரு வேலையையும் அவசரமாக செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகள் அதிகரிக்கலாம். குடும்பப் பொறுப்புகளை நீங்கள் எளிதில் சமாளிப்பீர்கள். பெற்றோர்களின் வழிகாட்டுதல் நிலுவையில் உள்ள விஷயங்களைத் தீர்க்க உதவும். சக ஊழியர்களின் புண்படுத்தும் வார்த்தைகளைப் பொருட்படுத்தாதீர்கள். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் பச்சை.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று சில தடைகளை சந்திக்க நேரிடும். இருப்பினும், உங்கள் முன்னேற்ற பாதையில் உள்ள தடைகள் ஓரளவு நீங்கும். உங்கள் குடும்ப பிரச்சினைகளை வெளியாட்களிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். உங்களின் அனைத்துப் பணிகளும் சவால்களுடன் தொடங்கினாலும், ஆனால் இறுதியில் சுமூகமாக முடிவடையும். இன்று உங்களின் அதிர்ஷ்டமான நிறம் ப்ரவுன்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று சுமாரான நாளாக இருக்கும். குடும்ப வாழ்வில் அமைதி நிலவும். வாழ்க்கைத் துணையுடனான உறவு முன்பை விட சிறப்பாக இருக்கும். சமூகத்தில் உங்கள் மரியாதை அதிகரிக்கும். வீட்டிற்கு புதிய விருந்தினரின் வருகையால் சூழ்நிலை மகிழ்ச்சியாக இருக்கும். வாகனத்தை கவனமாக ஓட்ட வேண்டும், இல்லையெனில் விபத்து ஏற்படலாம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் நீலம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மிகவும் வெற்றிகரமான நாளாக இருக்கும். உங்களின் அனைத்து முயற்சிகளும் சாதகமான பலனைத் தரும். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரிகளுக்கு லாபகரமான வாய்ப்புகள் தேடிவரும் மற்றும் வணிகம் பிரகாசமாக இருக்கும். குடும்பத்தில் குதூகலமான சூழல் நிலவும் மற்றும் சிறிய பயணம் செய்ய நேரலாம். விருந்தினர்கள் வருவதால் வீட்டில் கலகலப்பான சூழல் நிலவும். இன்று உங்களின் அதிர்ஷ்டமான நிறம் கருப்பு.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று சில எதிர்பாராத சிரமங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் சில நாட்களாக இருந்து வந்த கருத்து வேறுபாடு இன்று முடிவுக்கு வரும். சொத்து சம்பந்தமாக சகோதரர்களுடன் தகராறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த நேரத்தில் புதிய முதலீடுகள் செய்வதைத் தவிர்க்கவும், இல்லையெனில் நஷ்டம் ஏற்படலாம். தனிப்பட்ட பிரச்சினைகள் மற்றும் மன அமைதியின்மை காரணமாக, இன்று நீங்கள் மிகவும் மோசமான நாளை அனுபவிப்பார்கள். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)