Today Gold Rate: தினம் தினம் ஷாக் கொடுக்கும் தங்கம் விலை.. இன்றாவது ஆறுதல் கிடைக்குமா?

4 days ago
ARTICLE AD BOX

Today Gold Rate: தினம் தினம் ஷாக் கொடுக்கும் தங்கம் விலை.. இன்றாவது ஆறுதல் கிடைக்குமா?

Gold Rate
oi-Mani Singh S
Subscribe to Oneindia Tamil

சென்னை: தினம் தினம் ஷாக் கொடுத்து வரும் தங்கம் விலை நேற்றும் சவரனுக்கு ரூ.520 அதிகரித்தது. இதன் மூலம் மீண்டும் தங்கம் ஒரு சவரன் விலை 64 ஆயிரத்தை தாண்டியது. ஒரு கிராம் தங்கமும் 8 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனால் இன்றாவது தங்கம் விலை குறையுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் தங்கத்தின் விலை தொடர்ந்து வரலாறு காணாத அளவுக்கு விலை உயர்வை சந்தித்து வருகிறது. இதனால், நகை பிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர். தங்கம் விலை 60 ஆயிரத்தை தொட்டு விடுமோ என்ற அச்சம் போய், எங்கு 70 ஆயிரத்தை தாண்டிவிடுமோ என சில வாரங்களுக்குள் மக்கள் நினைக்கும் அளவுக்கு விலை உயர்வானது தொடர்ந்து அதிகரித்து வந்தது.

gold price Chennai gold

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள வர்த்த போர் அபாயம் காரணமாக தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளது. இதனால், தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் (ஜனவரி) 22 ஆம் தேதி ஒரு பவுன் ரூ.60 ஆயிரத்தை கடந்த நிலையில், தொடர்ந்து விலை அதிகரித்து கொண்டே வந்து, கடந்த 5 ஆம் தேதி ஒரு பவுன் ரூ.63 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை பதிவு செய்தது.

கடந்த 11 ஆம் தேதி வரலாற்றில் மீண்டும் சவரனுக்கு ரூ.64,000 என்ற விலையைத் தாண்டியது. இதனால் நகை பிரியர்கள் அதிர்ச்சி உடைந்தனர். அதன் பிறகும் தங்கம் விலை உயர்ந்தது. எனினும் இடையிடையே சில நாட்கள் விலை குறைந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்றும் தங்கம் விலை உயர்ந்தது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.520 உயர்ந்தது. நேற்று ஒரு சவரன் 64,280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

சென்னையில் கிராமுக்கு நேற்று ரூ.65 உயர்ந்து ரூ.8,035க்கு விற்பனையானது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 108க்கு விற்பனையானது. நேற்று முன் தினமும் தங்கம் விலை அதிகரித்து இருந்த நிலையில் நேற்றும் விலை அதிகரித்தது நகை பிரியர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. தினம் தினம் ஷாக் கொடுத்து வரும் தங்கம் விலை இன்றாவது குறையுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த பிப். 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலை:
19.02.2025 (நேற்று) ஒரு சவரன் ரூ.64,280
18.02.2025- ஒரு சவரன் ரூ.63,760
17.02.2025 - ஒரு சவரன் ரூ.63,520
16.02.2025 - ஒரு சவரன் ரூ.63,120
15.02.2025- ஒரு சவரன் ரூ.63,120
14.02.2025- ஒரு சவரன் ரூ.63,920
13.02.2025- ஒரு சவரன் ரூ.63,840
12.02.2025- ஒரு சவரன் ரூ.63,520
11.02.2025- ஒரு சவரன் ரூ.64,080
10.02.2025- ஒரு சவரன் ரூ.63,840
09.02.2025- ஒரு சவரன் ரூ.63,560
08.02.2025- ஒரு சவரன் ரூ.63,560
07.02.2025- ஒரு சவரன் ரூ.63,440
06.02.2025- ஒரு சவரன் ரூ.63,440
05.02.2025- ஒரு சவரன் ரூ.63,240
04.02.2025- ஒரு சவரன் ரூ.62,480
03.02.2025- ஒரு சவரன் ரூ.61,640
02.02.2025- ஒரு சவரன் ரூ.62,320
01.02.2025- ஒரு சவரன் ரூ.62,320 (பட்ஜெட்டுக்கு பின்)
01.02.2025- ஒரு சவரன் ரூ.61,960 (பட்ஜெட்டுக்கு முன்).

More From
Prev
Next
English summary
The price of gold, which has been giving shocks every day, increased by Rs. 520 per sovereign yesterday. With this, the price of gold per sovereign has once again crossed Rs. 64 thousand. One gram of gold has also crossed Rs. 8 thousand. This has raised expectations that the price of gold will decrease today.
Read Entire Article