Today gold rate: இன்றைய நாளை மிஸ் பண்ணாதீங்க.. 2வது நாளாக அதிரடியாக குறைந்த தங்கம்!

6 hours ago
ARTICLE AD BOX

Today gold rate: இன்றைய நாளை மிஸ் பண்ணாதீங்க.. 2வது நாளாக அதிரடியாக குறைந்த தங்கம்!

Gold Rate
oi-Nantha Kumar R
Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது. இதையடுத்து நேற்றைய தினம் தங்கம்விலை சரிந்தது. இதன் தொடர்ச்சியாக இன்று 2வது நாளாக தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. இதனால் நகை பிரியர்கள் உடனடியாக கடைக்கு சென்று வாங்கலாம்.

இந்தியாவில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச நிலவரங்களை பொறுத்து தினமும் தங்கம் விலை என்பது மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது நாடுகளுக்கு இடையேயான போர், மோதல் பதற்றம், டொனால்ட் டிரம்பின் வரி விதிப்பு முறை உள்ளிட்டவற்றால் தங்கத்தின் விலை என்பது தொடர்ந்து உச்சமடைந்து வருகிறது.

gold price gold

வரலாறு காணாத வகையில் தங்கம் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. இதனால் ஏழை மக்களுக்கு தங்கம் வாங்குவது என்பது பெரும் பிரச்சனையாக மாறி வருகிறது. அதேவேளையில் பெரும் பணக்காரர்கள் தங்கத்தின் மீதான முதலீட்டை அதிகரித்து வருகின்றனர். நாடுகள் இடையே நிலவும் பதற்றத்தால் தங்கம் தான் பாதுகாப்பான முதலீடு என்பதால் பெரும் பணக்காரர்கள் தங்கத்தை நோக்கி நகர்கின்றனர்.

போர் பதற்றம் மற்றும் டிரம்ப் பதவியேற்பு போன்ற காரணங்களால் முதலீட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். ஜனவரி 1 ஆம் தேதி ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 57,200 ஆக இருந்தது. அன்று முதல் தொடர்ந்து பல புதிய உச்சங்களை தங்கம் எட்டி வருகிறது.

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம் ஏன்? பின்னணியில் இருக்கும் 3 காரணங்கள்.. அடுத்து என்ன நடக்கும்
தங்கம் விலை வரலாறு காணாத உச்சம் ஏன்? பின்னணியில் இருக்கும் 3 காரணங்கள்.. அடுத்து என்ன நடக்கும்

தற்போது ஒரு பவுன் தங்கம் என்பது ரூ.65 ஆயிரத்தை கடந்துள்ளது. நேற்று தங்கம் விலை திடீரென்று குறைந்தது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.8270-க்கு விற்பனையானது. அதேபோல் நேற்று ஒரு சவரன் தங்க நகை ரூ.320 குறைந்து ரூ.66,160-க்கும் விற்பனையானது.
இந்நிலையில் தான் இன்று 2வது நாளாக மீண்டும் தங்கம் விலை குறைந்தது.

அதன்படி சென்னையில் இன்று ஒரு சவரன் தங்க நகை ரூ.320 வரை குறைந்தது. அதன்படி இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.65,840க்கு விற்பனையானது. அதேபோல் ஒரு கிராம் தங்கம் ரூ.8,230க்கு விற்பனையாகி வருகிறது. தொடர்ந்து உயர்ந்த வந்த தங்கம் விலைக்கு இன்று 2வது நாளாக பிரேக் விழுந்துள்ளதால் பொதுமக்கள் ஹேப்பியாகி உள்ளனர்.

 தங்க நகைப் பிரியர்களுக்கு குட் நியூஸ்.. சவரனுக்கு ரூ. 320 குறைந்த தங்கம் விலை
Today gold rate: தங்க நகைப் பிரியர்களுக்கு குட் நியூஸ்.. சவரனுக்கு ரூ. 320 குறைந்த தங்கம் விலை

கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்

22.03.2025(இன்று) - ஒரு சவரன் ரூ.66,160
21.03.2025 (நேற்று) - ஒரு சவரன் ரூ.66,160
20.03.2025 - ஒரு சவரன் ரூ.66,480
19.03.2025 ஒரு சவரன் ரூ.66,320
18.03.2025 ஒரு சவரன் ரூ.66,000
17.03.2025 ஒரு சவரன் ரூ.65,680
16.03.2025 ஒரு சவரன் ரூ.65,760
15.03.2025 ஒரு சவரன் ரூ.65,760
14.03.2025 (பிற்பகல்) ஒரு சவரன் ரூ.66,400
14.03.2025 (காலை) ஒரு சவரன் ரூ.65,840
13.03.2025- ஒரு சவரன் ரூ.64,960
12.03.2025 (ஒரு சவரன் ரூ.64,520
11.03.2025- ஒரு சவரன் ரூ.64,120
10.03.2025- ஒரு சவரன் ரூ.64,400
09.03.2025- ஒரு சவரன் ரூ.64,320
08.03.2025- ஒரு சவரன் ரூ.64,320
07.03.2025- ஒரு சவரன் ரூ.64,240
06.03.2025 (மதியம்)- ஒரு சவரன் ரூ.64,480
06.03.2025 (காலை)- ஒரு சவரன் ரூ.64,160
05.03.2025- ஒரு சவரன் ரூ.64,520
04.03.2025- ஒரு சவரன் ரூ.64,080
03.03.2025- ஒரு சவரன் ரூ.63,520
02.03.2025- ஒரு சவரன் ரூ.63,520
01.03.2025- ஒரு சவரன் ரூ.63,520

More From
Prev
Next
English summary
The price of gold continued to rise. Following this, the price of gold fell yesterday. Today, for the second day in a row, the price of gold has fallen sharply. Due to this, jewelry lovers can immediately go to the store and buy it.
Read Entire Article