ARTICLE AD BOX
ஆபரணத் தங்கத்தின் விலை சமீப காலமாக அதிகரித்து வந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது பாமர மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய தங்கம் விலை
ஆபணத் தங்கத்தின் விலை கடந்த சில தினங்களில் அதிகரித்து, சில தினங்களில் குறைந்தும் வருகின்றது.
இந்நிலையில், இன்று சவரனுக்கு 400 ரூபாய் குறைந்துள்ளது. நேற்றைய தினம் கிராம் ரூ.8,010 ஆகவும், சவரன் ரூ.64,080 ஆகவும் இருந்து வந்தது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து, 7,960 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 400 குறைந்து, 63,680 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.
தங்கத்தின் விலை தற்போது ரூ.60 ஆயிரத்திற்கு மேல் அதிகரித்து வரும் நிலையில், இன்று சற்று குறைந்து காணப்படுவதால் பாமர மக்களிடையே மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் வெள்ளியின் விலை எந்தவொரு மாற்றமும் இல்லாமல் இருக்கின்றது. இன்று கிராமுக்கு ரூ.106.00 ஆகவும், கிலோவிற்கு ரூ.1,06,000 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |