TNPL 2025 Auction!. இந்த 2 வீரர்களுக்குதான் செம மவுசு!. மிக குறைந்த விலையில் எடுக்கப்பட்ட வாஷிங்டன் சுந்தர்!

1 week ago
ARTICLE AD BOX

TNPL 2025 Auction: தமிழக பிரிமியர் லீக் ‘டி-20’ தொடரின் ஏலத்தில், விஜய் சங்கர், ஸ்வப்னில் சிங், முகமது, ஆண்ட்ரே சித்தார்த் ஆகியோர், அதிக தொகைகளை பெற்றுள்ளனர்.

தமிழக பிரிமியர் லீக் ‘டி-20’ தொடரின் (டி.என்.பி.எல்.,) 9 வது சீசன் விரைவில் நடக்கவுள்ளது. ஒவ்வொரு அணியிலும் 16 முதல் 20 பேர் இருக்க வேண்டும் என்பதால், மீதமுள்ள இடங்களுக்கான வீரர்களை தேர்வு செய்ய, சென்னையில் நேற்று ஏலம் நடந்தது. மொத்தம் 691 பேர் ஏலத்தில் இடம் பெற்றிருந்தனர். இதில், விஜய் சங்கருக்காக 4 அணிகள் கடும் போட்டிபோட்டன. குறிப்பாக, திண்டுக்கல் அணியும், சென்னை அணியும் கடுமையாக மோதிக் கொண்ட நிலையில், இறுதியில், சென்னை சூப்பர் கில்லிஸ் அணி, 18 லட்சம் மதிப்பில், இவரை வாங்கியது. இதனைத் தொடர்ந்து, 33 வயது பௌலர் முகமதுவை வாங்கவும், மதுரை, கோவை, சேலம் ஆகிய அணிகள் போட்டிபோட்டன. இறுதியில், 18.8 லட்சம் மதிப்பில், சேலம் ஸ்பார்டன்ஸ் அணி வாங்கியது.

முதல் ஏலத்தில் ‘ஆல் ரவுண்டர்’ விஜய் சங்கரை, ரூ. 18 லட்சத்துக்கு சேப்பாக்கம் அணி வாங்கியது. வேகப்பந்து வீச்சாளர் முகமதுவுக்கு, அடிப்படை விலை ரூ. 2 லட்சமாக இருந்தது. முடிவில் ரூ. 18.40 லட்சம் கொடுத்து சேலம் அணி வாங்கியது.
விக்கெட் கீப்பர் சுரேஷ் குமார் ரூ. 16.10 லட்சத்துக்கு திருச்சி அணி வாங்கியது. மற்றொரு விக்கெட் கீப்பர் ஹன்னியை (ரூ. 11.70 லட்சம்) திண்டுக்கல் அணி தட்டிச் சென்றது. எமிரேட்ஸ் அணிக்காக விளையாடி, 2022 ‘டி-20’ உலக கோப்பை தொடரில் ‘ஹாட்ரிக்’ விக்கெட் சாய்த்தவர் சுழல் வீரர் கார்த்திக் மெய்யப்பன். தற்போது மீண்டும் சென்னைக்கு திரும்பியுள்ள இவர், ரூ. 9.2 லட்சத்துக்கு மதுரை அணிக்கு சென்றார். ஏலத்தின் முடிவில், திண்டுக்கல், திருச்சி அணிகள் தவிர மற்ற அணிகளில் தலா 20 பேர் இடம் பெற்றுள்ளனர்.

சித்தார்த்தை கோவை கிங்ஸ் அணி, 8.4 லட்சத்திற்கு வாங்கியது. இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர், ஓய்வு பெற்ற அஷ்வினுக்கு அடுத்து முன்னணி பவுலராக உள்ளார். சர்வதேச போட்டிகளில் பங்கேற்க சென்றால், டி.என்.பி.எல்., தொடரில் முழுமையாக பங்கேற்க முடியாது. இதனால் ரூ. 6 லட்சம் மட்டும் கொடுத்து திருச்சி அணி வாங்கியது. டிஎன்பிஎல் 2024 தொடரின் இறுதிப் போட்டியில், ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, முதல்முறையாக கோப்பை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Readmore: திமிரா பேசினால் தமிழர்களின் தனிக்குணத்தை டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்…! முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை

The post TNPL 2025 Auction!. இந்த 2 வீரர்களுக்குதான் செம மவுசு!. மிக குறைந்த விலையில் எடுக்கப்பட்ட வாஷிங்டன் சுந்தர்! appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.

Read Entire Article