ARTICLE AD BOX
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், இன்று (மார்ச் 6) நடைபெற்ற ஆங்கில பாடத் தேர்வு எப்படி இருந்தது என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியுள்ளது. 12-ம் வகுப்பு தேர்வை 3,78,545 மாணவர்கள், 4,24,023 மாணவிகள், 18,344 தனித்தேர்வர்கள், 145 கைதிகள் என மொத்தம் 8,21,057 பேர் எழுதுகின்றனர்.
இன்று ஆங்கிலம் மொழி பாடத் தேர்வு நடைபெற்றது. இந்த ஆங்கிலத் தேர்வு ஆவரேஜ் அளவில் இருந்ததாக மாணவர்களும் நிபுணர்களும் கருத்து தெரிவிக்கின்றனர்.
ஆங்கில தேர்வு ஒட்டுமொத்தமாக ஆவரேஜ் அளவில் இருந்தது. ஒரு மதிப்பெண் வினாக்கள் ஆவரேஜ் அளவில் இருந்தது. ஆனால் 5 மதிப்பெண்கள் வினாக்கள் மற்றும் இலக்கணம் சார்ந்த வினாக்கள் சற்று கடினமாக இருந்தன. இருப்பினும் குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வை முடிக்க வகையில் தேர்வு எளிதாக இருந்தது என மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், பாடங்களின் முடிவில் இருக்கும் பயிற்சி வினாக்கள் அதிகமாக கேட்கப்பட்டு இருந்தன. சில கேள்விகளுக்கு சிந்தித்து பதிலளிக்க வேண்டியிருந்தது. பிழைகள் கண்டறிதல் எனப்படும் ஸ்பாட் தி எரர் வினாக்கள் கடினமாக இருந்தன என்றும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேநேரம், தேர்வு சற்று எளிதாக இருந்தது, எதிர்ப்பார்த்த கேள்விகளே கேட்கப்பட்டிருந்தன. பயிற்சி வினாக்களே அதிகம் இடம்பெற்றிருந்தன, இதனால் எளிதாக விடையளித்திருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.