TN HSC Biology Exam Analysis: தாவரவியல் ஓகே, விலங்கியல் சற்று கடினம்; பிளஸ் 2 பயாலஜி தேர்வு எழுதிய மாணவர்கள் கருத்து

1 day ago
ARTICLE AD BOX

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், இன்று (மார்ச் 18) நடைபெற்ற உயிரியியல் பாடத் தேர்வு எப்படி இருந்தது என்பதை இப்போது பார்ப்போம்.

Advertisment

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியுள்ளது. 12-ம் வகுப்பு தேர்வை 3,78,545 மாணவர்கள், 4,24,023 மாணவிகள், 18,344 தனித்தேர்வர்கள், 145 கைதிகள் என மொத்தம் 8,21,057 பேர் எழுதுகின்றனர்.

இன்று உயிரி-கணித பிரிவு மாணவர்களுக்கான உயிரியியல் பாடத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு எப்படி இருந்தது என்பது குறித்து மாணவர்களும் நிபுணர்களும் தெரிவித்த கருத்துக்களை இப்போது பார்ப்போம்.

உயிரியியல் தேர்வு ஒட்டுமொத்தமாக ஆவரேஜ் அளவில் இருந்தது. விலங்கியலை விட தாவரவியல் வினாக்கள் எளிதாக இருந்தன. எப்போதும் போல் விலங்கியல் கேள்விகள் சற்று கடினமாக இருந்தன. கட்டாயமாக பதிலளிக்க வினாக்கள் சற்று கடினமாக இருந்தன. 3 மதிப்பெண் மற்றும் 5 மதிப்பெண் வினாக்கள் சற்று கடினமாக இருந்தன. ஒரு மதிப்பெண் வினாக்கள் பெரும்பாலும் பயிற்சி வினாக்களாக இருந்தன.

Advertisment
Advertisements

பாடங்களுக்கு உள்ளிருந்து சில வினாக்கள் கேட்கப்பட்டு இருந்தன. முந்தைய ஆண்டு வினாக்கள் சில கேட்கப்பட்டிருந்தாலும், கடினமான கேள்விகளே மீண்டும் கேட்கப்பட்டிருந்தன. மேலும் பெரும்பாலும் எதிர்பார்க்கப்பட்ட கேள்விகளே இடம்பெற்றிருந்தன என்று மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேபோல் நிபுணர்களும் தேர்வு ஆவரேஜ் அளவில் இருந்ததாகவும், மாணவர்கள் 70 மதிப்பெண்களுக்கு 50க்கு மேல் எடுக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறுகின்றனர்.

Read Entire Article