தமிழ்நாட்டில் இன்று தொடங்கும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை 8 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதுகின்றனர். இதையடுத்து, மாணவர்களுக்கு தமிழ்நாடு ஆளுநர், முதலமைச்சர் தொடங்கி, பல்வேறு தலைவர்களும், தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி +2 பொதுத்தேர்வுகள்

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் இன்று(03.03.25) தொடங்கி வரும் 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வுகளை சுமார் 8.21 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். இந்த தேர்வுகளை சுமூகமாக நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாக, தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. வழக்கம்போல் தேர்வுகள் 3 மணி நேரம் நடைபெறும் நிலையில், மாணவர்கள் வினாத்தாளை படிக்க கூடுதலாக 10 நிமிடங்களும், தங்கள் விவரங்களை சரிபார்க்க 5 நிமிடங்களும் வழங்கப்படுகிறது. சரிபார்ப்புக்காக, மாணவர்கள் தங்கள் ஹால் டிக்கெட்டின் நகலை, அடையாளச் சான்றுடன் எடுத்துச் செல்ல வேண்டும்.

+2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தலைவர்கள் வாழ்த்து

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆளுநர், முதலமைச்சர் மற்றும் பல்வேறு தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். நேற்று இரவே தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துகளை பதிவிட்டுள்ள தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, இரவு நன்றாக உறங்கி, தேர்வுகளை அமைதியாகவும், நம்பிக்கையுடனும் அணுகுமாறு மாணவர்களை அறிவுறுத்தியுள்ளார்.

"நாளை +2 தேர்வு எழுதும் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் எனது சிறப்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்! இன்று இரவு நன்றாக உறங்குங்கள். உங்கள் தேர்வுகளை அமைதியாகவும் நம்பிக்கையுடனும் அணுகுங்கள். முன்கூட்டியே தேர்வு மையத்தை அடையவும். ஒவ்வொரு கேள்வியையும் கவனமாகப் படித்து,…

— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) March 2, 2025

இதேபோல், தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துச் செய்தியை நேற்று பதிவிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்த தேர்வுகள் மாணவர்கள் வாழ்வின் அடுத்த நிலைக்கான படிக்கட்டுகள் என கூறி, ஆல் த பெஸ்ட் என வாழ்த்தியுள்ளார்.

பொதுத்தேர்வை எழுதவுள்ள மாணவர்களே…

மதிப்பெண்கள் உங்கள் அறிவுத்திறனுக்கான மதிப்பீடுகள் அல்ல; வாழ்வின் அடுத்தநிலைக்கான படிக்கட்டுகள்!

Stay calm, do your best, and succeed. All the best! pic.twitter.com/PRItHwN8Tn

— M.K.Stalin (@mkstalin) March 2, 2025

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு பதிவிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், மாணவர்கள் சிறப்பான முறையில் ஆல் பாஸ் செய்து, அவர்களின் கனவுகள் மெய்ப்பட வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.

நாளை முதல் பொதுத்தேர்வு எழுதவுள்ள
12-ம் வகுப்பைச் சேர்ந்த மாணவச் செல்வங்களுக்கு #AllTheBest !

எந்த அச்சமும் இன்றி,
தங்களின் கல்வித்திறனை ,
தேர்வெனும் களத்தில் சிறப்பாக வெளிக்காட்டி ,

நீங்கள் அனைவரும் #AllPass செய்து ,
சிறப்பான முறையில் வெற்றி பெற்று, உங்கள் கனவுகள்… pic.twitter.com/FB63H23Gf0

— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) March 2, 2025

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தியில், கேள்விகளுக்கான பதில்களை எவ்வித பதட்டமும் இல்லாமல் எழுதுமாறும், படிக்கும் ஆர்வத்துடன் உடல்நலனிலும் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கேட்கப்படும் கேள்விகளுக்கு தெளிவாக பதில்களை எழுதுங்கள். எவ்வித பதட்டமும் வேண்டாம்.

படிக்கிற ஆர்வத்துடன் உங்கள் உடல்நலன் மீதும் கவனம்…

— Udhay (@Udhaystalin) March 2, 2025

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், மாணவச் செல்வங்கள் நம்பிக்கையுடனும், மகிழ்ச்சியுடனும் தேர்வுகளை எழுதுமாறு கூறியுள்ளார்.

11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவச் செல்வங்கள் பொதுத்தேர்வு எழுதவுள்ளார்கள்.

மாணவச் செல்வங்கள் நம்பிக்கையுடனும், மகிழ்ச்சியுடனும் தேர்வு எழுதுங்கள்.

இத்தனை ஆண்டுகாலமாக எழுதிய தேர்வுகளைப் போலவே இதுவும் ஒரு தேர்வுதான் எனும் மனநிலையோடு தேர்வறைக்குள் நுழையுங்கள்.

வளமான எதிர்காலம்…

— Anbil Mahesh (@Anbil_Mahesh) March 2, 2025

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், தம்பி, தங்கைகள் தேர்வுகளை துணிவுடன், தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு, வெற்றி பெற்று வாழ்வில் சிகரம் தொட வாழ்த்துவதாக கூறியுள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பொதுத் தேர்வு எழுத உள்ள 11 & 12ஆம் வகுப்பைச் சேர்ந்த அன்புத் தம்பிகள் மற்றும் தங்கைகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பொதுத் தேர்வினைத் துணிவுடன், தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு, தேர்வில் வெற்றி பெற்று, வாழ்வில் சிகரம் தொட…

— TVK Vijay (@TVKVijayHQ) March 3, 2025