ARTICLE AD BOX
Tirupati: காரடையான் நோன்பு நாளில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க இத்தனை மணி நேரமா?
திருப்பதி: திருப்பதியில் சர்வ தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க நேற்றைய தினம் (மார்ச் 14-ஆம் தேதி) 18 மணி நேரம் ஆனது. வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் காத்திருக்கும் அறைகள் நிரம்பி டிபிசி வரை பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
திருமலை திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்ய தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வழிபடுகிறார்கள். அது போல் பண்டிகை காலங்களில் லட்சக்கணக்கானோர் வருகை தருகிறார்கள். எந்த நேரத்திலும் ஏழுமலையானை ஏராளமான பக்தர்கள் தரிசித்து வருவதால் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

அந்த வகையில் மார்ச் 14ஆம் தேதியான நேற்று மொத்தம் 63,987 பேர் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். அது போல் 26,880 பேர் மொட்டை அடித்துக் கொண்டனர். நேற்று ஒரே நாளில் உண்டியல் காணிக்கை ரூ 2.88 கோடியாகும். சர்வ தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க 18 மணி நேரம் ஆனது. வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் காத்திருக்கும் அறைகள் நிரம்பி டிபிசி வரை பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
ரூ 300 சிறப்பு தரிசனத்திற்கு 5 மணி நேரத்திற்கு மேல் ஆனது. நடைபாதையாக வந்த பக்தர்கள் 8-10 மணி நேரம் தரிசனத்திற்காக காத்திருந்தனர். மேலும் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான தரிசன ஷெட்யூலில் அவர்கள் 2 மணி முதல் 3 மணி நேரம் வரை காத்திருந்தனர்.
திருப்பதிக்கு மாதந்தோறும் 24 ஆம் தேதி (இந்த தேதி மாறுதலுக்குள்பட்டது, இதற்கான அறிவிப்பு மாதந்தோறும் 21 ஆம் தேதி வரும்), அதாவது 3 மாதங்களுக்கு முன்பே ரூ 300 தரிசன டிக்கெட்டுகள் புக்கிங் தொடங்குகின்றன. அதில் ஒரு அக்கவுன்ட்டில் 6 டிக்கெட்டுகள் வரை புக்கிங் செய்யலாம். அது போல் எக்ஸ்ட்ரா லட்டு வேண்டுமானாலும் தனியே பணம் செலுத்திக் கொள்ளலாம். குடும்ப உறுப்பினர்களின் ஆதார் கார்டு, பாஸ்போர்ட் அல்லது வாக்காளர் அடையாள அட்டையில் ஏதேனும் ஒன்றை ஆவணமாக கொண்டு டிக்கெட் புக் செய்ய வேண்டும். அறைகளை புக் செய்ய அன்றைய தினம் பிற்பகல் 3 மணிக்கு புக்கிங் ஸ்லாட் திறக்கப்படும். அதில் புக் செய்துக் கொள்ளலாம். ரூ 300 தரிசனத்திற்கும் அறை புக்கிங்கிற்கும் ஹை ஸ்பீடு இன்டர்நெட் இருந்தால்தான் புக் செய்ய முடியும்.
- கோவையில் ஹோம் லோன் போட்டு, புதிதாக வீடு கட்டியவருக்கு 4 வருடம் கழித்து ட்விஸ்ட்.. கோர்ட் குட் நியூஸ்
- Asthma home remedy: வெற்றிலை+ ஒரு துண்டு இஞ்சி போதும்! 48 நாளில் கரைந்தோடும் சளி! ஆஸ்துமாவுக்கு பைபை
- நகை அடகு வைக்க போறீங்களா? அப்போ இதை நோட் பண்ணுங்க.. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய முடிவு
- தமிழக பட்ஜெட் ரூபாய் லோகோ மாற்றத்தால்.. புலம்பி தீர்க்கும் வட இந்திய நெட்டிசன்கள்!
- '₹' பதில் 'ரூ'.. குறியீட்டு வாதம் மட்டுமல்ல, இந்திய ஒற்றுமையை பலவீனப்படுத்துகிறது: நிர்மலா சீதாராமன்
- தேனியில் வைகை ஆற்றுப்பாலத்தில் பைக்கை நிறுத்திய கள்ளக்காதல் ஜோடி.. இதுல ஹேப்பி டூர்.. இரவில் கொடுமை
- ரூபிணிக்கு இந்த நிலைமையா? வேலூர் பிரமுகர் யார்? திருப்பதி கோயிலில் ஸ்பெஷல் தரிசனத்துக்கு ஆசைப்பட்டு?
- மும்மொழி சர்ச்சை: ஓபன் சவால் விடுகிறேன்.. பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய்க்கு பிடிஆர் சேலன்ஞ்!
- அமெரிக்காவின் ஹெல்த்கேர் சிஸ்டமே அழிய போகுது.. இந்தியாவை சீண்டி சூடு போட்டுக்கொண்ட டிரம்ப்.. தேவையா?
- இன்சல்ட் செய்தாரா நயன்தாரா? கடுப்பான மீனா போட்ட பதிவு! தொடங்கியது அடுத்த பிரச்சனை
- கைகோர்க்கும் ஆப்கானிஸ்தான்.. சீனுக்குள் வரும் சீனா.. அப்பவே சொன்ன மோடி! பலுசிஸ்தானில் நடப்பது என்ன?
- மகளிர் உரிமை தொகை.. நாளை இந்த அறிவிப்பு வந்தால்.. எல்லாமே மாறும்.. பட்ஜெட்டில் பெரிய சர்ப்ரைஸ்?