ARTICLE AD BOX
Thandel OTT: நாக சைதன்யா தன் நடிப்பில் அசத்தி 100 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆபிஸ் வசூலைப் தண்டேல் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து சில சர்ச்சைகள் நிலவுகிறது. இந்தப் படத்தின் டிஜிட்டல் பிரீமியர் குறித்த அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், பாக்ஸ் ஆபிஸில் மிரட்டலான வசூலைக் குவித்து வரும் இந்தப் படத்தின் டிஜிட்டல் உரிமங்களை நெட்ஃபிளிக்ஸ் அதிக தொகைக்கு வாங்கியுள்ளது. படம் வெளியான நாளில் இருந்து நல்ல வசூலைக் குவித்து வருவதால், இந்தப் படம் எப்போது வெளியாகும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.
தண்டேல் ஓடிடி வெளியீட்டு தேதி
நாக சைதன்யா, சாய் பல்லவி இணைந்து நடித்த படம் தண்டேல். பிப்ரவரி 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, இதுவரை ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. சைதன்யாவின் திரை வாழ்க்கையில் இதுவே அதிக வசூல் செய்த படம். இந்தப் படம் மார்ச் 6ம் தேதி முதல் நெட்ஃபிளிக்ஸில் ஸ்ட்ரீம் செய்யப்படும் என்று செய்திகள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.
அதேசமயம், மார்ச் இரண்டாவது வாரத்தில் வெளியாகலாம் என்று சமூக வலைத்தளங்களில் மற்றொரு செய்தி பரவுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என்று கூறப்படும் நிலையில், இதுவரை படக்குழு அல்லது நெட்ஃபிளிக்ஸ் இது குறித்து எதுவும் பேசவில்லை.
தண்டேல் ஓடிடி உரிமங்கள்
தண்டேல் ஓடிடி உரிமங்களை நெட்ஃபிளிக்ஸ் அதிக தொகைக்கு வாங்கியுள்ளது என்று முன்னர் செய்திகள் வெளியாகின. இந்த உரிமங்களை விற்பதன் மூலம் படத்தின் 80% பட்ஜெட் ஈட்டப்பட்டது என்று கூறப்படுகிறது.
திரையரங்குகளில் வெளியான நான்கு வாரங்களுக்குப் பிறகு படம் டிஜிட்டல் பிரீமியரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, மார்ச் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் இந்தப் படம் ஓடிடியில் வெளியாகும் என்று தெரிகிறது.
தண்டேல் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
தண்டேல் படம் பிப்ரவரி 7ம் தேதி வெளியாகி, 12 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. நாக சைதன்யாவின் திரை வாழ்க்கையில் இதுவே அதிக வசூல் செய்த படம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதும் தெலுங்கில் தண்டேலுக்கு போட்டியாக வேறு எந்தப் படமும் இல்லை என்பதால், பாக்ஸ் ஆபிஸில் வலுவாக உள்ளது. இந்தியாவில் 12 நாட்களில் ரூ.60 கோடி நிகர வசூல் செய்துள்ளது.
உண்மை சம்பவம்
தண்டேல் படம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. ஸ்ரீகாக்குளத்தைச் சேர்ந்த சில மீனவர்கள் குஜராத் கடற்கரையில் மீன்பிடிக்கச் சென்று, அங்குள்ள பாகிஸ்தான் கடற்படையினரிடம் சிக்கி, அவர்களது சிறையில் அடைக்கப்பட்ட கதையை இந்தப் படம் காட்டுகிறது. காதல் கதையுடன் தேசபக்தியையும் இணைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்திற்கு பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்