Tamizha Tamizha: பார்வை இல்லாத மனிதர்களின் ஏக்கம்... நெஞ்சை பிசையும் உண்மை

2 days ago
ARTICLE AD BOX

தமிழா தமிழா நிகழ்ச்சியில் பார்வை மாற்றுத்திறனாளிகளின் உலகம் அறிந்ததும், அறியாததும் என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.

தமிழா தமிழா

தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.

இந்த வாரத்தில் பார்வை மாற்றுத்திறனாளிகளின் உலகம் அறிந்ததும், அறியாததும் என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.

இதில் பார்வையில்லாத நபர்களின் ஏக்கம் காண்பவர்களின் கண்களை கலங்க வைத்துள்ளது.

தாங்கள் பார்க்கும் சினிமா, கணவன் மனைவியை பார்த்துக் கொள்ள முடியாதது, கண்ஜாடையில் பேச முடியாமல் தவிப்பது என்பதை கூறியுள்ளனர்.

இதனை கேட்கும் பொழும் பார்வையாளர்களாகிய நமது கண்கள் நிச்சயமாக கலங்குகின்றது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
Read Entire Article