தமிழ்நாடு முழுவதும் நாளை 1,000 முதல்வர் மருந்தகங்களைத் திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, மேலும் 14 ராமேஸ்வரம் மீனவர்களை சிறை பிடித்து இலங்கை கடற்படை அராஜகம். இன்று ஒரே நாளில் 32 மீனவர்களையும், 5 படகுகளையும் சிறை பிடித்துள்ளது இலங்கை.

தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் பொறுப்பிலிருந்து தடங்கம் சுப்பிரமணியை விடுவித்தும், அப்பொறுப்பிற்கு பி.தர்மசெல்வனை நியமித்தும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு.

இந்தியா - பாகிஸ்தான் போட்டியை கடற்கரையில் காண ஏற்பாடு - மெரினா மற்றும் பெசண்ட்நகர் கடற்கரையில் பிரமாண்ட திரைகள் அமைப்பு

"ஆபாச சித்தரிப்புகளை உடனடியாக இணையத்திலிருந்து அகற்ற வழிவகை செய்ய வேண்டும்" - சௌமியா அன்புமணி!

ஓசூர் அருகே நொகனூர் கிராமப்பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றை யானையால் அச்சத்தில் மக்கள் - வனப்பகுதிக்கு விரட்ட கோரிக்கை

சென்னை அடுத்த தாம்பரத்தில் காரின் கதவைத் திறந்து மூடிய மனநலம் பாதிக்கப்பட்டவர் மீது இருவர் தாக்குதல். கீழே விழுந்து பலத்த காயமடைந்த அவர் உயிரிழந்த சோகம்.

சிவகங்கை புத்தகத் திருவிழாவில் கலைநிகழ்ச்சியில் நடனமாடிய, பள்ளி நடன ஆசிரியர் ராஜேஷ் கண்ணன் (53) மயங்கி விழுந்து உயிரிழப்பு

திருப்பூர்: கருமாரம்பாளையம் பகுதியில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 2 பேர் கைது கைதான ஹுசைன் (45), இப்ராஹிம் (33) இருவரும் திருப்பூரில் 9 ஆண்டுகளாக தங்கி அங்குள்ள பனியன் நிறுவனத்தில் இவர்கள் பணியாற்றி வந்துள்ளனர்

கொடைக்கானல்: பூம்பாறை கிராமத்தில் உள்ள குழந்தை வேலப்பர் கோயில் தேரோட்ட திருவிழாவில், லட்சக்கணக்கான தேங்காய்கள் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனின் ஜீப் வாகனம் பறிமுதல் மேலும் பல்வேறு பகுதிகளில் அவர் திருடி விற்ற 100 சவரன் தங்க நகைகளும் 2 வியாபாரிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கார் பந்தயத்தின்போது விபத்தில் சிக்கிய நடிகர் அஜித் குமார் நல்வாய்ப்பாக காயங்கள் ஏதுமின்றி தப்பினார்