ARTICLE AD BOX
Tamannaah Breakup: அடக்கொடுமையே.. தமன்னாவை கழட்டிவிட்டுட்டாரா விஜய் வர்மா?.. பிரேக்கப் ஆகிடுச்சாம்!
சென்னை: தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலம் வில்லியாக அறிமுகமானாலும் வியாபாரி படத்தில் எஸ்.ஜே. சூர்யாவுக்கு ஹீரோயினாக நடித்து கதாநாயகியாக பையா, வீரம், சுறா, படிக்காதவன், கண்டேன் காதலை என பல படங்களில் நடித்த தமன்னா கடைசியாக ரஜினிகாந்த் உடன் காவாலா பாட்டுக்கெல்லாம் ஆட்டம் போட்டு வேறலெவல் ஃபேமஸ் ஆனார்.
கடந்த ஆண்டு சுந்தர். சி இயக்கத்தில் தமன்னா லீடு ரோலில் நடித்து வெளியான அரண்மனை 4ம் பாகம் 100 கோடி வசூலை கடந்து மெகா வெற்றியை பெற்றது. பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை தமன்னா காதலிப்பதாக அறிவிக்கப்பட்டு இருவரும் கடந்த சில ஆண்டுகளாக லிவ்வின் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்த நிலையில், திடீரென இருவரும் பிரேக்கப் செய்து பிரிந்து விட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

மில்க் பியூட்டி என ரசிகர்களால் கொண்டாப்படும் தமன்னாவையே ஒருத்தர் பிரேக்கப் செய்து பிரிவாரா என பாலிவுட் முதல் கோலிவுட் ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர். நடிகை தமன்னாவும் இந்த பிரேக்கப் காரணமாக மனமுடைந்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
விஜய் வர்மா - தமன்னா காதல் தெரிந்தது எப்படி?: கடந்த 2023ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது தமன்னா மற்றும் விஜய் வர்மா ஒருவருக்கொருவர் லிப் கிஸ் கொடுத்துக் கொண்டிருக்கும் வீடியோ நண்பர்களின் மொபைலில் வீடியோவாக எடுக்கப்பட்டு வெளியானதும் இருவரும் காதலில் விழுந்ததை ரசிகர்கள் அறிந்துக் கொண்டனர். ரசிகர்களுக்கு அதனை அறிவிக்கவே இருவரும் அப்படியொரு ஸ்டண்ட்டை செய்தனர். அதற்கு முன்னதாகவே சில ஆண்டுகளாக இருவரும் நெருங்கி பழகி வந்ததாகவும் கூறுகின்றனர்.

லஸ்ட் ஸ்டோரீஸில் ஓவர் நெருக்கம்: லஸ்ட் ஸ்டோரீஸ் சீசன் 2வில் விஜய் வர்மாவுடன் தமன்னா இணைந்து படுக்கையறை காட்சிகளில் எல்லை மீறி நடித்த நிலையில், இருவருக்கும் இடையே கெமிஸ்ட்ரி வேறமாறி வொர்க்கவுட் ஆகி இருவரும் காதலில் விழுந்துவிட்டதாக பாலிவுட்டில் பல தகவல்கள் வெளியாகின. கடந்த ஆண்டு இறுதியிலேயே தமன்னா விஜய் வர்மாவை திருமணம் செய்துக் கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இருவரும் திருமண அறிவிப்பை வெளியிடாமல் போனதற்கு இந்த பிரேக்கப் பிரச்சனை தான் காரணமா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.
தமன்னா - விஜய் வர்மா பிரேக்கப்: காதல் ஜோடிகளாக ஒன்றாக மும்பையில் சுற்றி வந்த இருவரும் கடந்த சில வாரங்களாக பொதுவெளியில் தென்படவே இல்லை. இந்நிலையில், இருவரும் ஒருவரையொருவர் பிரேக்கப் செய்து பிரிந்து விட்டதாக பிங்க்வில்லாவில் செய்திகள் வெளியாகி உள்ளன. காதலை வெளிப்படையாக தெரியப்படுத்திய இருவரும் பிரேக்கப்பை அப்படியே கமுக்கமாக விட்டுவிட்டனரே என்கிற கேள்விகளை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.

திருமணத்துக்கு ஒத்துக்கொள்ளவில்லையா?: பல பாலிவுட் நடிகைகளுடன் படு நெருக்கமான காட்சிகளில் விஜய் வர்மா நடித்து வருகிறார். ஷீ வெப்சீரிஸில் எல்லாம் ஸ்டார் பட நடிகை அதிதி போஹங்கரை கண்ட இடத்தில் கைவைத்து நடித்திருப்பார். தமன்னாவுக்கு 35 வயதாகும் நிலையில், திருமணத்துக்கு வற்புறுத்தியிருக்கலாம் என்றும் ஆனால், இப்போதைக்கு திருமணம் செய்யும் எண்ணம் விஜய் வர்மாவுக்கு இல்லாததால் இருவரும் சமரசமாக பேசி நண்பர்களாகவே தொடர்வோம் என்றும் காதலர்களாக வேண்டாம் என முடிவெடுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், பிரேக்கப் குறித்து இருவரும் அதிகாரப்பூர்வமாக எந்தவொரு கருத்தையும் வெளியிடவில்லை. முன்னதாக அர்ஜுன் கபூர் - மலைகா அரோரா இப்படித்தான் சைலண்ட்டாக பிரேக்கப் செய்து பிரிந்தனர்.