ARTICLE AD BOX
இந்தியாவிலிருந்து தமிழர் ஒருவர் பண்ணைப்புரம் கிராமத்திலிருந்து கிளம்பி லண்டன் அப்பல்லோ அரங்கில் முதன்முதலாக சிம்பொனியை அரங்கேற்றுவது இளையராஜாதான். இதனால் அரசியல் பிரமுகர்கள், பிரபலங்கள் எனப் பலரும் இளையராஜாவை பெருமையோடு வாழ்த்தியிருந்தனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசு சார்பில் வாழ்த்தி, லண்டலிருந்து திரும்பிய இளையராஜாவை அரசு மரியாதையுடன் வரவேற்றுமிருந்தார். மேலும், இளையராஜாவின் அரை நூற்றாண்டு கால திரை இசை பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவு செய்துள்ளதாக மகிழ்ச்சிப் பொங்க அறிவித்திருந்தார்.
இருப்பினும் மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் இளையராஜாவிற்கு மத்திய அரசிடமிருந்து, குறிப்பாக பிரதமர் மோடியிடமிருந்து வாழ்த்து வராமல் இருந்ததை இளையராஜாவின் ரசிகர்கள் பலரும் குறிப்பிட்டிருந்தனர்.
A memorable meeting with Hon’ble PM Shri @narendramodi ji We spoke about many things, including my Symphony “Valiant”. Humbled by his appreciation and support. @OneMercuri pic.twitter.com/caiP770y13
— Ilaiyaraaja (@ilaiyaraaja) March 18, 2025இந்நிலையில் இளையராஜாவை நேரில் அழைத்து வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார் பிரதமர் மோடி. இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் இளையராஜா, "மதிப்பிற்குரிய பிரதமர் மோடி ஜியை சந்தித்து எனது சிம்பொனி 01 'Valiant' குறித்தும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் உரையாடி அவரது வாழ்த்தையும், ஆதரவையும் பெற்றுக் கொண்டேன்" என்று பதிவிட்டிருக்கிறார்.
Symphony: 'சிம்பொனி என்றால் என்ன?' மொஸார்ட், பீத்தோவன்... இப்போ இளையராஜா!Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
