Sweetheart Blue Sattai Maran Review: சகிக்கல.. ரியோவின் ஸ்வீட் ஹார்ட்டை டேமேஜ் செய்த ப்ளூ சட்டை!

4 hours ago
ARTICLE AD BOX

Sweetheart Blue Sattai Maran Review: சகிக்கல.. ரியோவின் ஸ்வீட் ஹார்ட்டை டேமேஜ் செய்த ப்ளூ சட்டை!

Reviews
oi-Mohanraj Thangavel
| Published: Saturday, March 15, 2025, 8:20 [IST]

சென்னை: யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ரியோ ராஜ் நடித்து நேற்று அதாவது பிப்ரவரி 14ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் ஸ்வீட் ஹார்ட். படத்தில் ரியோவுடன் கோபிகா ரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்தை ஸ்வீநித் சுகுமார் இயக்கியுள்ளார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா தயாரித்தது மட்டும் இல்லாமல் இசையை அமைத்துக் கொடுத்துள்ளார். படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், " படத்தின் ஆரம்பத்தில் ஹீரோ சிறுவயதில் இருக்கும் போது, அவரது அப்பாவையும் ஹீரோவையும் விட்டுவிட்டு அவரது அம்மா வேறு ஒருவருடன் போய்விடுகிறார். இதனாலேயே ஹீரோவுக்கு குடும்ப வாழ்க்கையின் மீது பெரிதாக நம்பிக்கையும் ஈடுபாடு கிடையாது. ஹீரோ பெரியவர் ஆன பின்னர் ஒரு கட்டத்தில் கதாநாயகி சந்திக்கிறார். இருவரும் நன்றாக பழகுகிறார்கள். இப்போது கதாநாயகி இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கூறுகிறார். அதனை ஹீரோ தட்டிக் கழிக்கிறார். ஒரு கட்டத்திற்கு மேல் முடியாது எனக் கூறி விடுகிறார்.

இதனால் இருவருக்கும் பிரேக்-அப் ஆகிவிடுகிறது. பிரேக்-அப் ஆகி கொஞ்ச நாளில் கதாநாயகி கர்ப்பமாக இருப்பது தெரிய வருகிறது. இப்போது அவர்கள் நினைத்தாலும் பிரிய முடியாது என்கிற சூழல் உருவாகிவிடுகிறது. அதன் பின்னர் என்ன ஆனது என்பதுதான் இந்த படத்தின் கதை. இந்த படத்தை ரொமாண்டிக் - காமெடி படங்கள் என எடுத்து வைத்துள்ளார்கள்.

Rio Raj Yuvan Shankar Raja Sweetheart Blue Sattai Maran Review

குழப்பம்: வழக்கமாக இது போன்ற படங்களில் கதாநாயகனும் கதாநாயகியும் எப்படியாவது ஒன்றிணைந்து விட வேண்டும் எனத் தோன்றும். ஆனால் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு அப்படியான எண்ணம் எதுவும் உருவாகவில்லை. படத்தில் பெரிய பிரச்னையே நான் - லீனியரில் கதை சொல்கிறேன் என குழப்பி வைத்துள்ளார்கள். படத்தின் கதை முதல் 20 நிமிடத்திலேயே வந்துவிடும். ஆனால் அதன் பின்னர் என்ன ஆனது என்பதை நீங்கள் படத்தில் பாதியில் எழுந்து வந்து விட்டு, அதன் பின்னர் வந்து பார்த்தால் கூட கதை எங்கேயும் நகர்ந்திருக்காது. அங்கேதான் இருக்கும்.

Rio Raj Yuvan Shankar Raja Sweetheart Blue Sattai Maran Review

சகிக்கல: படத்தில் கதாநாயகி கர்ப்பமாக உள்ளாரா இல்லையா என்பதை கண்டுபிடிக்க, யூரின் டெஸ்ட் எடுப்பார்கள். அந்த வேலையைப் பார்ப்பதற்கு , பழைய ஹாலிவுட் படத்தில் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு சென்று ராணுவ ரகசியங்களை எடுத்து வருவதைப் போல ரொம்பவும் இந்த காட்சியை எடுத்து வைத்துள்ளார்கள். இந்த காட்சியை எல்லாம் பார்க்க சகிக்கவில்லை.

Take a Poll

கேவலம்: மாடர்ன் லவ் என படத்தை தொடங்கிவிட்டதால், படத்தை முடிக்கும் போது, ஆண் பெண் உறவு குறித்தோ, குடும்ப வாழ்க்கை குறித்தோ, குழந்தை குறித்தோ கருத்து பேசி முடிப்பார்கள் என நினைத்தால், என் குடும்பம் மட்டுமா மோசமான குடும்பம், உனது குடும்பமும் தான் மோசமான குடும்பம் என முடித்துள்ளார்கள். ஒரு படத்தில் வடிவேலு காமெடியில், வருவதைப்போல, சின்ன வயசில் இருந்தே, நான் அவன் குடும்பத்தை கேவலமாக பேசுவேன், அவன் என் குடும்பத்தை ரொம்பவும் கேவலமாக பேசுவான் என வருவது போல் படத்தை எடுத்து வைத்துள்ளர்கள்" என ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

Rio Raj Yuvan Shankar Raja Sweetheart Blue Sattai Maran Review

More From FilmiBeat

கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read Entire Article