ARTICLE AD BOX
Suzhal 2 Blue Sattai Maran Review: சுழல் 2 சீரிஸை விட.. விமர்சனத்தில் சம்பவம் செய்த ப்ளூ சட்டை மாறன்
சென்னை: கடந்த 2022ஆம் ஆண்டு புஷ்கர் - காயத்ரி எழுதிய சுழல் வெப் சீரிஸ் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற சீரீஸாக மாறியது. அதன் பின்னர் இந்த சீரிஸின் இரண்டாவது சீசன் நேற்று அதாவது பிப்ரவரி 28ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆனது. இதில் ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர், லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த சீரிஸ் தொடர்பாக தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார், ப்ளூ சட்டை மாறன். இது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "சுழல் 1-இன் இறுதியில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு கொலை செய்துவிடுவார். இதனால் ஐஸ்வர்யா ராஜேஷ் ஜெயிலுக்குப் போகிறார். அதே கொலை வழக்கை விசாரித்து வந்த கதிர் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். ஐஸ்வர்யா ராஜேஷை வெளியில் எடுக்க கதிர் முயற்சி செய்து கொண்டு உள்ளார். இதற்கு புகழ் பெற்ற வக்கீலாக இருக்கும் லாலை அணுகியிருப்பார். திடீரென ஒருநாள் லால் அவரது காட்டேஜில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடப்பார். இது கொலையா தற்கொலையா? அவர் இருந்த காட்டேஜ் உட்புறமாக தாழ் போடப்பட்டிருக்கும். அந்த காட்டேஜ் உள்ளே இருக்கும் கபோர்டுக்குள் ஒரு பெண் துப்பாக்கியோடு இருப்பார். ஆனால் அவரும் கொலை செய்திருக்க வாய்ப்பில்லை. காரணம், அந்த கபோர்ட் வெளிப்புறமாக தாழ் போடப்பட்டிருக்கும். இப்போது யார் இந்த கொலையச் செய்திருப்பார் என்ற குழப்பத்துடன் இந்த கதை ஆரம்பிக்கும்.

இப்போது புதிதாக 7 பெண்கள் தனித்தனி காவல் நிலையத்தில் லாலை நான்தான் கொலை செய்தேன் என சரணடைகிறார்கள். இப்போது இந்த வழக்கு மேலும் குழப்பமாக மாறிவிடுகிறது. இப்போது இது கொலையா? தற்கொலையா? இதற்கு காரணம் யாரு என்பதுதான் இந்த வெப் சீரிஸின் கதை. இதுவரை சொல்லப்பட்ட கதை அனைத்தும் ஏறக்குறைய முதல் எபிசோடில் வந்துவிடும்.
சலிப்பு: அடுத்த மூன்று எபிசோடில் கதை நகரவேயில்லை. சுழல் போல ஒரே இடத்தில்தான் கதை சுழன்று கொண்டு உள்ளது. 6, 7 மற்றும் 8வது எபிசோடில்தான் கதை நகர்கிறது. ஆனால் அதற்குள் லாலை கொலை செய்தது யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும், இது தற்கொலையாக கூட இருக்கட்டும் என்ற மனநிலைக்கு கொண்டு வந்து விட்டு விடுகிறார்கள். சீரீஸில் விறுவிறுப்பே இல்லை.
ஐஸ்வர்யா ராஜேஷ்: கதாநாயகியாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு என்ன வேலை என்றே தெரியவில்லை. அவர் ஜெயிலில் இருக்கிறார், அவரை பெயிலில் எடுக்க ஒரு வக்கீல் வந்தார், அந்த வக்கீலை கொலை செய்துவிட்டார்கள். படத்தின் கிளமேக்ஸ் வரை ஐஸ்வர்யா ராஜேஷ் வருகிறாரே தவிர, அவரது கதாபாத்திரம் இல்லை என்றாலும் கதை நகர்ந்திருக்கும். எந்த ஒரு காட்சியையுமே சரியாக செய்யவில்லை. கதையை வளைத்து வளைத்து சௌகரியத்திற்கு எடுத்து வைத்துள்ளார்கள். கதை திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லை என்றால் பரவாயில்லை சம்பவங்களில் சுவாரஸ்யம் செய்திருக்கலாம்.
லாஜிக் மீறல்கள்: இந்த படத்தில் மூன்று சம்பவங்கள் உள்ளது. ஒன்று போலீஸ் இன்வெஸ்டிகேஷன், காவல்துறை விசாரணையில் இதுவரை பார்க்காத கோணத்தை காட்டியிருந்தால், சுவாரஸ்யமாக இருந்திருக்கும். மற்றொன்று ஜெயில் காட்சிகள். ஜெயில் காட்சிகள் உண்மைக்கு நெருக்கமாகவும் இல்லை, லாஜிக் மீறல்கள் என்றால் அளவுக்கு அதிகமாக உள்ளது. ஹுயூமன் டிராஃபிக் காட்சிகளும் உள்ளன.
மொத்ததில்: அவையும் பெரிய அளவில் எடுபடவில்லை. சீரீஸில் பல கதாபாத்திரங்களை காட்டுகிறார்கள். ஆனால் அவையெல்லாம் சீரிஸ்க்கு பாரமாக உள்ளதே தவிர, எந்த வகையிலும் சப்போர்ட்டாக இல்லவே இல்லை. சுழல் 1 வெப் சீரிஸ் பார்க்கும்போது 5வது எபிசோடுக்கு மேல் அடுத்து என்ன அடுத்து என்ன என்ற எண்ணம் இருந்தது. ஆனால் சுழல் 2வில் அடுத்து என்ன ஆனால் எனக்கு என்ன என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.