Sunita Williams: பூமிக்கு திரும்பிய வீரர்களை வரவேற்ற திமிங்கலங்கள்!; இணையத்தில் வைரலாகும் வீடியோ!

4 hours ago
ARTICLE AD BOX

9 மாதங்களுக்குப் பிறகு பூமியில் கால் பதித்திருக்கிறார் சுனிதா வில்லியம்ஸ். விண்வெளி நிலையத்தில் கடந்த 9 மாதங்களாக இருந்த சுனிதா வில்லியம்ஸ் உள்பட நால்வரை அழைத்து வருவதற்கு ஸ்பேஸ் எக்ஸின் டிராகன் விண்கலம் கடந்த மார்ச் 16-ம் தேதி அனுப்பப்பட்டது. நேற்றைய தினம் இந்த நால்வரும் காலை 10.30 மணிக்கு பூமியை நோக்கி தங்களின் பயணத்தை தொடங்கினர். சரியாக 17 மணி நேர பயணத்திற்குப் பிறகு அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலுள்ள பெருங்கடல் பரப்பின் மூலம் இன்று காலை 3.27 மணிக்கு பூமியில் தடம் பதித்தனர்.

Sunitha Willams & Butch Willmoresunitha willams & butch willmore

பூமிக்கு திரும்பிய இந்த நான்கு விண்வெளி வீரர்களை திமிங்கலங்கள் வரவேற்றிருக்கின்றன. திமிங்கலம் கடலில் இவர்கள் தரையிறங்கிய கேப்ஸியூலாய் சுற்றியே நீந்தி திமிங்கலங்கள் இவர்களை வரவேற்ற காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. மீட்பு கப்பல் மூலம் கேப்ஸியூலை மீட்டுக் கொண்டிருக்கும்போதும் திமிங்கல மீன்கள் கேப்ஸியூலை சுற்றி வந்திருக்கிறது. பூமியின் புவி ஈர்ப்பு விசை உள்பட பல விஷயங்கள் இவர்களுக்கு பழகுவதற்காக கேப்ஸியூலிலிருந்து வெளிவந்த இந்த விண்வெளி வீரர்கள் 45 நாள்கள் மறுவாழ்வு மையத்தில் இருப்பார்கள்.

சுனிதா வில்லியம்ஸ் 9 மாதங்களுக்கு பிறகு வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினார் - விரிவான தகவல்கள்

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

Read Entire Article