Sunita Williams: 9 மாதங்கள் கழித்து பூமிக்கு வரும் சுனிதா வில்லியம்ஸ் பெற போகும் ஊதியம் என்ன?

13 hours ago
ARTICLE AD BOX

Sunita Williams: 9 மாதங்கள் கழித்து பூமிக்கு வரும் சுனிதா வில்லியம்ஸ் பெற போகும் ஊதியம் என்ன?

New York
oi-Vishnupriya R
Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: கடந்த 9 மாதங்களாக நாசாவின் சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸின் ஊதியம் என்ன தெரியுமா? அவர் எதற்காக 9 மாதங்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்தார் என்பதையும் பார்க்கலாம்.

விண்வெளியில் உள்ள நாசாவின் ஸ்பேஸ் ஸ்டேஷனுக்கு நாசா சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனியா வில்லியம்ஸும் பட்ச் வில்மோரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் போயிங் ஸ்டார்லைனர் என்ற விண்கலம் மூலம் சென்றனர்.

sunita williams nasa

அவர்கள் சுமார் 8 நாட்கள் பயணமாக சென்றிருந்த நிலையில் பூமிக்கு திரும்ப வேண்டிய நிலையில் போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் அங்கேயே தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த விண்கலத்தில் ஏற்பட்ட சிக்கலால் அவர்களால் பூமிக்கு திரும்ப முடியாத நிலை இருந்தது.

இதனால் அவர்களின் 8 நாள் பயணம் என்பது 9 மாதங்களாக விண்வெளியிலேயே நீடித்தது. இதைத் தொடர்ந்து எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் மூலம் சுனிதா வில்லியம்ஸையும் பட்ச் வில்மோரையும் பூமிக்கு அழைத்து வர அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப் அரசு முயற்சி செய்தது.

இதையடுத்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் என்ற விண்கலம், பால்கன்-9 எனும் ராக்கெட் மூலம் கடந்த சனிக்கிழமை விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. இந்த மீட்பு விண்கலத்தில் ரஷ்யாவை சேர்ந்த கிரிஸ்பெஸ்கோவ் உள்ளிட்ட 4 விண்வெளி வீரர்கள் சென்றுள்ளனர்.

அந்த விண்கலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை சர்வதேச விண்வெளி நிலையத்தில் சென்றடைந்தது. அதன்படி இன்று இரவு பூமிக்கு புறப்படும் சுனிதா வில்லியம்ஸ் நாளை மாலை வந்தடைவார் என அறிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை நேரலையாக ஒளிபரப்ப நாசா ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நிலையில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோரின் ஊதியம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி நாசா விஞ்ஞானியான சுனிதா வில்லியம்ஸ் அமெரிக்காவின் பொது அட்டவணையில் மிக அதிக ஊதியம் பெறும் ஜிஎஸ் 15 என பிரிவின் கீழ் வருகிறார்.

அந்த பிரிவின் கீழ் வரும் ஊழியரக்களுக்கு ஆண்டு ஊதியம் என்பது 125,133 அமெரிக்க டாலர்கள் முதல் 162,672 அமெரிக்க டாலர்கள் ஆகும். அதாவது இந்திய மதிப்பில் ரூ 1.10 கோடி முதல் ரூ 1.40 கோடியாகும்.

இந்த நிலையில் சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியிருந்த காலகட்டத்திற்கும் சேர்த்து சுனிதாவுக்கு சிறப்பு ஊதியமும் வழங்கப்படும் என முன்னாள் வீரர் கேடி கோல்மன் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் குறைந்த அளவு சிறப்பு ஊதியமே வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

2010- 2011 காலகட்டத்தில் 159 நாட்களுக்கு தங்கியிருந்த தனக்கு 636 டாலர்கள் மட்டுமே வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார். அதாவது ஒரு நாளைக்கு 4 டாலர்கள் வீதம் சுனிதா வில்லியம்ஸுக்கு 287 நாட்களுக்கு மொத்தம் ஒரு லட்சம் ரூபாய் சிறப்பு ஊதியமாக வழங்கப்படும்.

சுனிமாவின் 9 மாத சம்பளம் மட்டுமே சிறப்பு ஊதியத்துடன் சேர்த்து இந்திய மதிப்பில் ரூ. 82 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை பெறுவார். சுனிதா, வில்மோருடன் மேலும் இரு வீரர்களும் பூமிக்கு திரும்புகிறார்கள். நேற்று இரவு அமெரிக்க நேரபடி டிராகன் விண்கலம் விடுவிக்கப்பட்டிருக்கும். அதன்படி அவர்கள் நாளை பூமிக்குத் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
English summary
Do you know what is the salary of Sunita Williams?
Read Entire Article