Sunita Williams: 28,000 km/h வேகம்.. "டிராகன்" உள்ளே சுனிதா வில்லியம்ஸ்! மின்னல் வேகத்தில் பூமிக்கு திரும்புகிறார்!

5 hours ago
ARTICLE AD BOX

Sunita Williams: 28,000 km/h வேகம்.. "டிராகன்" உள்ளே சுனிதா வில்லியம்ஸ்! மின்னல் வேகத்தில் பூமிக்கு திரும்புகிறார்!

Washington
oi-Vigneshkumar
Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: கடந்தாண்டு ஜூலை மாதம் வழக்கமான ஆய்வுப் பணிகளுக்காக சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகியோர் விண்வெளிக்கு அனுப்பப்பட்டனர். சில காரணங்களால் அவர்களின் 8 நாள் பயணம் 9 மாதங்களாக மாறியது. நீண்ட தாமதத்திற்குப் பிறகு அவர்கள் பூமி திரும்பும் சூழலில், அவர்களை அழைத்து வரும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் குறித்து நாம் பார்க்கலாம்.

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் நாசா தொடர்ச்சியாக ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும். அதன்படி கடந்த ஜூலை மாதம் விண்ணுக்கு அனுப்பப்பட்ட சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் 9 மாதங்களுக்குப் பிறகு பூமி திரும்புகிறார்கள். எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் அவர் பூமி திரும்புகிறார். நாளை அதிகாலை பூமி திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sunitha Williams Return to Earth All You Need to Know about SpaceX Dragon Rocket

ஸ்பேஸ் டிராகன்

மனிதர்களைப் பாதுகாப்பாக விண்வெளிக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதற்காகவே உருவாக்கப்பட்டது தான் இந்த ஸ்பேஸ் டிராகன். இதுவரை டிராகன் 1 மற்றும் 2 இணைந்து 49 பயணங்களை வெற்றிகரமாக முடிந்துள்ளன. அதிலும் குறிப்பாகச் சர்வதேச விண்வெளி மையத்திற்கு மட்டும் 44 முறை வெற்றிகரமாகச் சென்று திரும்பியுள்ளது.

எவ்வளவு பேர் பயணிக்கலாம்

டிராகன் விண்கலம் மூலம் ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 4 விண்வெளி வீரர்கள் பயணிக்கலாம். விண்வெளி வீரர்கள் மட்டுமின்றி சரக்குகளையும் எடுத்துச் செல்ல இது பயன்படும். சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மனிதர்களை அழைத்துச் சென்ற முதல் தனியார் விண்கலம் இதுவாகும். 8.1மீ உயரம், 4மீ விட்டம் கொண்ட இந்த டிராகன் விண்கலம், விண்வெளிக்குச் செல்லும் போது அதிகபட்சம் 6000 கிலோ வரை எடுத்துச் செல்லும் திறன் கொண்டது. அது பூமி திரும்பும்போது 3000 கிலோவை எடுத்து வரும் திறனைப் பெற்றுள்ளது.

புவி ஈர்ப்பு விசையை தாண்டி அதிவேகமாக விண்வெளிக்குப் பறக்கவும், விண்வெளியில் உள்ள வெற்றிடத்தில் இருந்து பூமிக்கு எளிமையாகத் திரும்பவும் 16 இன்ஜின்களை இது கொண்டு இருக்கிறது. எல்லா ஸ்பேஸ்எக்ஸ் விண்கலங்களைப் போலவும் இந்த டிராகன் விண்கலனையும் பல முறை மீண்டும் மீண்டும் உபயோகிக்கலாம் என்பது இதன் தனிச் சிறப்பாகும்.

நடக்க முடியாதாம்! ரத்த கட்டிகள் வேறு.! சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்பும்போது ஏற்படும் சிக்கல் என்ன?
நடக்க முடியாதாம்! ரத்த கட்டிகள் வேறு.! சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்பும்போது ஏற்படும் சிக்கல் என்ன?

பாதுகாப்பு வசதிகள்

டிராகன் விண்கலனில் அதிக திறன் கொண்ட ஆண்டெனா அமைப்பு இருக்கிறது. இதன் மூலம் எவ்வளவு வேகத்தில் பறந்தாலும் டிராகன் விண்கலனால் கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்பில் இருக்க முடியும். இது பாதுகாப்பை உறுதி செய்கிறது. விண்வெளியில் இருந்து பூமி திரும்பும்போது உருவாகும் அதீத வெப்பத்தைச் சமாளிக்கும் வகையில் ஸ்டீல் கவசத்தையும் டிராகன் விண்கலம் கொண்டுள்ளது. மேலும், பூமியை நெருங்கும் போது அதன் வேகத்தை மேலும் குறைக்க பாராசூட் அமைப்பும் அதில் இருக்கும்.

வேகம்

பூமிக்குத் திரும்பும் போது அதிகபட்சம் சுமார் 28,200 km/h வேகத்தில் டிராகன் விண்கலத்தால் பயணிக்க முடியும். இருப்பினும், பாதுகாப்பான தரையிறக்கத்தை உறுதி செய்ய அதன் வேகம் கணிசமாகக் குறைக்கப்படும். அதிலும் பாராசூட்கள் விரிந்த பிறகு, இன்னும் வேகம் குறைந்து, 563-644 கிமீ வேகத்தில் அது கடலில் விழும்.

நாசா

செலவுகளை குறைக்க வேண்டும் என்பதற்காக நாசா கடந்த சில ஆண்டுகளாகவே தனியார் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. அதன்படி சுனிதா வில்லியம்ஸும், வில்மோரும் போயிங் ஸ்டார்லைனர் மூலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டனர். இருப்பினும், அதில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கலால் இருவரையும் அதே விண்கலனில் பூமிக்கு அழைத்து வர முடியவில்லை. சில காலம் கழித்து போயிங் ஸ்டார்லைனர் மட்டும் பூமி திரும்பியது.

விண்வெளியில் 280+ நாட்கள் சிக்கி தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்! சம்பளம் இவ்வளவு குறைவா.. ஷாக் ஆவீங்க
விண்வெளியில் 280+ நாட்கள் சிக்கி தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்! சம்பளம் இவ்வளவு குறைவா.. ஷாக் ஆவீங்க

சிக்கியது எப்படி

இதனால் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகியோர் சர்வதேச விண்வெளி மையத்திலேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இப்படி தான் அவர்களின் 8 நாள் பயணம் 9 மாதமாக மாறியது. அவர்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் நாசா ஆய்வு பணிகளை மேற்கொண்டு வந்ததால் அவர்களை உடனடியாக பூமிக்கு அழைத்து வர கட்டாயம் ஏற்படவில்லை. இந்தச் சூழலில் தான் அதிபராகப் பதவியேற்ற டிரம்ப், அவர்களைப் பூமிக்கு அழைத்து வர உத்தரவிட்டார். மேலும், இதற்கு எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் விண்கலனை பயன்படுத்தவும் உத்தரவிட்டார்.

அதன்படி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மாற்று வீரர்களை அழைத்துக் கொண்டு ஸ்பேஎஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் கடந்த சில நாட்களுக்கு முன்பு விண்வெளிக்குச் சென்றது. அதே விண்கலனில் தான் இப்போது சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் பூமி திரும்ப இருக்கிறார்கள். இந்திய நேரப்படி நாளை அதிகாலை 4 மணியளவில் அவர்கள் பூமி திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
English summary
As astronaut Sunita Williams heads back to Earth aboard the SpaceX Dragon rocket, here's a comprehensive guide to this powerful spacecraft (சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்பும் ஸ்பேஎஸ்எக்ஸ் டிராகன் வின்கலத்தின் சிறப்புகள் என்ன): Learn about its features, specifications, and capabilities that make it a reliable choice for NASA's crewed missions.
Read Entire Article