ARTICLE AD BOX
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டிராகன்’ திரைப்படம் இன்று வெளியாகி, பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. இந்த நிலையில், தன்னுடைய அடுத்த படம் குறித்த அறிவிப்பை இயக்குநர் அஸ்வத் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிய ‘டிராகன்’ திரைப்படம் இன்று வெளியானது. இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சி முடிந்த உடனே, பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருவதை அடுத்து, "லவ் டுடே" போல் இந்த படமும் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இன்று வந்து கொண்டிருக்கும் பாசிட்டிவ் விமர்சனங்களை அடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அஸ்வத் மாரிமுத்து, மீண்டும் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் ஒரு படம் இயக்கப் போவதாக அறிவித்துள்ளார். "எஸ்.டி.ஆர் 51" படத்தை முடித்தவுடன் இந்த புதிய படம் தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
"டிராகன்" படம் எடுத்து கொண்டிருக்கும் போதே, தனது வேலை மீதான நம்பிக்கையால் தான் எஸ்.டி.ஆர் 51 படத்தின் வாய்ப்பை ஏஜிஎஸ் நிறுவனம் கொடுத்தது என்றும், அதற்காக தயாரிப்புக் குழுவிற்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் கூறினார். எனவே, டிராகன் கூட்டணி மீண்டும் இணைய உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.