ARTICLE AD BOX
IPL 2025 SRH: ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் சனிக்கிழமை (மார்ச் 22) அன்று தொடங்க இருக்கிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோத உள்ளது. இந்த போட்டி கொல்கத்தாவில் நடைபெற உள்ளது.
IPL 2025 SRH: வருகிறார் பாட் கம்மின்ஸ்
ஐபிஎல் 2025 தொடரில் அடுத்த நாள், மார்ச் 23ஆம் தேதி இரண்டு லீக் போட்டிகள் நடைபெறுகின்றன. அன்று இரவு சென்னையில் நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இதற்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் அதே வேளையில், மதியம் ஹைதராபாத் நகரில் நடைபெறும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கும் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது எனலாம். கேப்டன் கம்மின்ஸ், ஹெட் ஆகியோரும் ஆஸ்திரேலியாவில் இருந்து புறப்பட்டுவிட்டதால் எஸ்ஆர்ஹெச் ரசிகர்கள் குஷியில் இருக்கிறார்கள்.
IPL 2025 SRH: ரன் மழை பொழிந்த சன்ரைசர்ஸ்
காரணம் ஒன்றுதான். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அதிரடி பேட்டிங்கை பார்க்க அத்தனை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஐபிஎல் தொடரில் அதிக ஸ்கோரை அடித்த அணியாக ஹைதராபாத் கடந்தாண்டு சாதனை படைத்தது. கடந்தாண்டு பெங்களூருவில் 287 ரன்கள், ஹைதராபாத்தில் 277 ரன்கள் என அடித்து துவைத்தது, சன்ரைசர்ஸ் ஹைதராபாத். கடந்தாண்டு பலமுறை 200+ ரன்களை ஹைதராபாத் அணி தாண்டியது.
IPL 2025 SRH: ஹெட் - அபிஷேக் கூட்டணி
இதற்கு முக்கிய காரணம், டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா ஆகியோரின் அதிரடியான ஓப்பனிங்தான். கடந்தாண்டு ஹெட் 15 இன்னிங்ஸில் 567 ரன்கள், அபிஷேக் சர்மா 16 இன்னிங்ஸில் 484 ரன்கள் என பெரியளவில் ரன்களை குவித்தனர்.
IPL 2025 SRH: 300 ரன்கள் ஜஸ்ட் மிஸ்
இவர்களுக்கு பின் நம்பர் 3இல் ராகுல் திரிபாதி விளையாடினார். ஹெட் - அபிஷேக் சர்மா அதிரடியாக ஆடினால், இவர் பொறுப்புடன் ஆடுவார். அடுத்து, மார்க்ரம், நிதிஷ் குமார் ரெட்டி, கிளாசென் என மிடில் ஆர்டர் மொத்தமும் அதிரடி வீரர்களால் நிரம்பியது என்பதால் ஸ்கோரும் ராக்கெட் வேகத்தில் ஏறியது. திரிபாதி மற்றும் மார்க்ரம் இன்னும் கூடுதலாக அடித்திருந்தால் எஸ்ஆர்ஹெச் அணி 300 ரன்களை கூட தாண்டியிருக்க வாய்ப்பிருக்கிறது.
IPL 2025 SRH: நம்பர் 3இல் நங்கூரமிடும் இஷான் கிஷன்
எனவே இந்தாண்டு அந்த பிரச்னையையும் போக்க மற்றொரு அதிரடி வீரர் இஷான் கிஷன் ஏலத்தில் எடுக்கப்பட்டார். இவர் நம்பர் 3இல் அதிரடியை காண்பிப்பார் எனலாம். தங்கள் அணிக்குள்ளான பயிற்சி ஆட்டங்களில் அடுத்தடுத்து இஷான் கிஷன் 24 பந்துகளில் 64 ரன்களையும், 30 பந்துகளில் 73 ரன்களையும் குவித்துள்ளார். வரும் தொடரில் அவர் மீதும் எதிர்பார்ப்பு அதிகரித்துவிட்டது. வலது - இடது காம்பினேஷனும் அணிக்கு கிடைக்கும்.
IPL 2025 SRH: எஸ்ஆர்ஹெச் பலமான பேட்டிங் ஆர்டர்
இதனால், நம்பர் 4இல் ஹென்ரிச் கிளாசென் மற்றும் நம்பர் 5இல் நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் விளையாடுவார்கள் எனலாம். நம்பர் 6இல் அபினவ் மனோகர் விளையாட வாய்ப்புள்ளது. நம்பர் 7இல் பாட் கம்மின்ஸ் இறங்குவார். எனவே, கடந்தாண்டு தவறவிட்ட 300 ஸ்கோரை இந்தாண்டு நிச்சயம் அடித்துவிடுவார்கள் எனலாம்.
IPL 2025 SRH: எஸ்ஆர்ஹெச் பந்துவீச்சு படையும் சிறப்பு
அவர்களுக்கு பந்துவீச்சில் முகமது ஷமி, ராகுல் சஹார், ஆடம் ஸாம்பா, சிமர்ஜித் சிங் ஆகியோர் விளையாடலாம். ஹர்ஷல் கமிந்து மென்டிஸ், உனத்கட், முல்டர் மற்றும் இஷான் மலிங்கா உள்ளிட்டோர் பேக்அப்பிற்கும் இருக்கிறார்.
IPL 2025 SRH: எஸ்ஆர்ஹெச் முரட்டு பிளேயிங் லெவன்
டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், ஹென்ரிச் கிளாசென், நிதிஷ் குமார் ரெட்டி, அபினவ் மனோகர், பாட் கம்மின்ஸ், ராகுல் சஹார், ஆடம் ஸாம்பா, முகமது ஷமி, சிமர்ஜித் சிங். இம்பாக்ட் வீரர்: ஹர்ஷல் பட்டேல்
மேலும் படிக்க | மும்பை அணிக்கு மற்றொரு கெட்ட செய்தி... இந்த வீரருக்கு கிரிக்கெட் வாரியம் நோட்டீஸ்!
மேலும் படிக்க | ஐபிஎல் 2025: இந்த அணிதான் கோப்பையை வெல்லும்.. அடித்து சொல்லும் முன்னாள் வீரர்!
மேலும் படிக்க | IPL 2025: சிஎஸ்கே அணியின் பெரிய ஆயுதம் யார் தெரியுமா? தோனி, பதிரானா இல்லை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ