SRH vs RR: 'ரெண்டு டீம்-லயும் பவுலிங் வீக்'... வர்ணனையாளர் முத்து பேட்டி

1 day ago
ARTICLE AD BOX

ச. மார்ட்டின் ஜெயராஜ். 

Advertisment

10 அணிகள் பங்கேற்கும் ஐ.பி.எல். 2025 டி20 தொடரின் 18-வது சீசன் நேற்று சனிக்கிழமை (மார்ச் 22) முதல் தொடங்கி நடந்து வருகிறது. நேற்று நடந்த தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான கொல்கத்தாவை அவர்களது சொந்த மைதானத்தில் வைத்து வீழ்த்தி, வெற்றியுடன் தொடங்கியிருக்கிறது பெங்களூரு. இந்நிலையில், இந்தத் தொடரில் இன்று பிற்பகல் 3:30 மணிக்கு ஐதராபாத்தில் அரங்கேறும் 2-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலபரீட்சை நடத்துகின்றன. 

இந்த நிலையில், இந்த இரு அணிகள் மற்றும் அவர்களது வீரர்கள் ஆட்டம் எப்படி இருக்கும் என்பது குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து தனது கருத்தை 'தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்' இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டார். 

இதுகுறித்து அவர் பேசுகையில், "இந்த வருடமும் ஐதராபாத் அணியிடம் இருந்து அதிக எதிர்பார்ப்புகள் இருக்கிறது. அவர்கள், எல்லா வருடமும் கோட்டை அழித்துவிட்டு முதலில் இருந்து போடும் அணியாக இருந்துள்ளார்கள்.ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர்கள் நிலையாக இருந்திருக்கிறார்கள். இப்போது அதே அணி போன்றுதான் களமிறங்குகிறார்கள். பேட்டிங்கில் ஏற்கனவே அதிரடியாக ஆடும் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ஹென்ரிச் கிளாசென் உள்ளார்கள். அடுத்ததாக இஷான் கிஷனை ஏலத்தில் இருந்து வாங்கி இருக்கிறார்கள். 

Advertisment
Advertisements

மிடில் ஆடரில் அபினவ் மனோகர், நிதிஷ் ரெட்டி போன்ற வீரர்கள் வலு சேர்ப்பார்கள். பவுலிங்கில் முகமது ஷமி, கேப்டன் பேட் கம்மின்ஸ் உள்ளார்கள். அதேநேரத்தில், அவர்கள் ஹர்ஷல் படேலை அதிகம் நம்புகிறார்கள். அவர் சமீபத்தில் இந்தியாவுக்கு ஆடவில்லை என்றாலும், முக்கியமான ஓவர்களை வீசி விக்கெட்டுகளை எடுக்கிறார். அதனால், நடராஜன் செய்ததைப் போல் அவரிடம் இருந்து எதிர்பார்ப்பார்கள். அதை எந்த அளவுக்கு அவர் பூர்த்தி செய்யப்போகிறார் என்பதுதான் தெரியவில்லை. 

கம்மின்ஸ் காயத்தைப் பொறுத்தவரை, அவர் சாம்பியன்ஸ் டிராபியில் கூட ஆடாமல் வந்திருக்கிறார். அவர் ஃபிட்டாக இருக்கிறார் என்பதுபோல் தான் தெரிகிறது. ஆனால், அவரது காயம் பிரச்சனை தொடர்ந்தால் அது அவர்களுக்கு கவலை அளிக்கும். அதனால், பவுலிங் பிரிவில் ஐதராபாத் கொஞ்சம் அடி வாங்கும் என்றுதான் நான் நினைக்கிறேன். 

ராஜஸ்தான் அணிக்கு கேப்டன் (சஞ்சு சாம்சன்) முதல் மூன்று போட்டிகளில் ஆடப் போவதில்லை. அது அந்த அணிக்கு பெரிய அடியாக இருக்கும். ஏனெனில், சஞ்சு சாம்சன் தொடரின் தொடக்க போட்டிகளில் அதிரடியாக  ஆடக்கூடியவர். குறிப்பாக, முதல் 2, 3 போட்டிகளில் அவர் சூப்பராக பேட்டிங் ஆடுவார். இப்போது அவருக்குப் பதில் ரியான் பராக் கேப்டனாக செயல்பட இருக்கிறார். 

அவர் உள்ளூர் போட்டியில் அசாம் அணிக்கு கேப்டன்சி செய்து இருந்தாலும், ஐ.பி.எல் அணிக்கு கேப்டன்சி செய்து என்பது மிகப் பெரிய சவால். இருப்பினும், அவர் தன்னம்பிக்கை அதிகம் கொண்ட வீரர். கடந்த  சீசனில் தன்னை தானே மீட்டு  எடுத்தார். கிட்டத்தட்ட 573 ரன்கள் அடித்தார். நல்ல சீசனாகவும் அது அவருக்கு  அமைத்தது. இந்த சீசனிலும் அவர் சிறப்பாக ஆடுவார் என எதிர்பார்க்கலாம். 

ராஜஸ்தான் அணியைப் பொறுத்தவரையில், அவர்கள் எதிர்காலத்திற்கும் சிறந்த அணியாக இருக்கிறார்கள். அதிரடி தொடக்கம் கொடுக்க  யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் உள்ளனர். இடது கை வீரராக சிறப்பாக செயல்படக்கூடிய நிதிஷ் ராணா இருக்கிறார். அவர்கள் ஷிம்ரோன் ஹெட்மியர் (ரூ. 11 கோடி) மற்றும் துருவ் ஜூரல் (ரூ. 14 கோடி) ஆகியோரை தக்கவைத்துக் கொண்டனர். ஆனால், அவர்களை ஏலத்தில் விட்டு இருந்தால், இன்னும் குறைந்த விலைக்கு வாங்கி இருக்கலாம் என்பது எனது கருத்து.

எனவே, ராஜஸ்தான் அணியில்  பேட்டிங்கில் பெரிய பிரச்சனைகள் எதுவும் எனக்குத் தெரியவில்லை. ஆனால், பவுலிங்கில் சற்று அடி வாங்குவார்கள். குறிப்பாக, ஸ்பின் பிரிவில் பலத்த அடி வாங்க வாய்ப்புள்ளது. ஏனெனில், அவர்கள் சஹால் மற்றும் அஸ்வினை தக்கவைக்கவில்லை. ஏலத்தில் சென்று வாங்கவும் இல்லை. அவர்களுக்குப் பதில் வனிந்து ஹசரங்கா, மகிஷ் தீக்ஷனா எடுத்து இருக்கிறார்கள். அவர்கள் இருவருமே வெளிநாட்டு வீரர்கள். அங்கேதான் அவர்கள் மாட்டிக்  கொள்வார்கள். நீங்கள் ஜோஃப்ரா ஆர்ச்சரை ஆட வைக்க வேண்டும். அவர் எப்படி 14 போட்டிகளிலும் ஆடுவார்? என்பதில் எனக்கு சந்தேகம் இருக்கிறது. 

ஹசரங்கா, தீக்ஷனா இருவரும் இலங்கைக்கு சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். அதனால் அவர்கள் இருவருடன் போட்டியை தொடங்குவதைத் தவிர ராஜஸ்தானுக்கு வேறு வழிஇல்லை. சீம் பவுலிங்கில் ஆர்ச்சரைத் தவிர, சந்தீப் ஷர்மா இருக்கிறார். அவர் பவர் -பிளேயில் அதிக விக்கெட் வீழ்த்தியவராகவும் இருக்கிறார். கடந்த சீசனில் டெத் ஓவர்களில் சிறப்பாக வீசினார். அவருடன் சென்னை அணிக்காக சிறப்பாக ஆடிய துஷார் தேஷ்பாண்டே உள்ளார். என்ன இருந்தாலும், மற்ற அணிகளுடன் ஒப்பிடும் போது, பவுலிங்கில் ராஜஸ்தான் கொஞ்சம் வீக் தான். குறிப்பாக, ஸ்பின் பிரிவில் அடி விழும். 

பவுலிங் போட வெளிநாட்டு வீரர்களை ஆடும் லெவனில் கொண்டு வந்தால், நீங்கள் பேட்டிங்கில் வெளிநாட்டு வீரர்களை சேர்க்க முடியாது. அதனால், அவர்கள் இந்திய பேட்ஸ்மேன்கள், வெளிநாட்டு பவுலர்களுடன் தான் செல்வார்கள். 4 வெளிநாட்டு வீரர்களில் 3 பேரை பவுலிங் போட வைக்க வேண்டும். அதனால், ஒருவரை மட்டும் வைத்து தான் நீங்கள் பேட்டிங் வரிசையை செட் செய்ய முடியும்." என்று  வர்ணனையாளர் பிரதீப் முத்து தெரிவித்தார்.

Read Entire Article