Skin care: முகத்தை மாசுப்படுத்தும் மருக்களை இல்லாமலாக்கும் முல்தானி மட்டி பேக்

3 days ago
ARTICLE AD BOX

அழகை இரட்டிப்பாக்கும் பொருட்களில் முக்கிய இடத்தை முல்தானி மட்டி பிடிக்கிறது.

இதனை முகத்தை பயன்படுத்தும் பொழுது சருமத்தில் உள்ள மாசுக்கள் வெளியேறி முகம் பார்ப்பதற்கு பளபளப்பாக இருக்கும்.

சிலருக்கு எப்போதும் முகத்தில் எண்ணெய் பிசுக்கள் இருந்து கொண்டே இருக்கும். இதனை முல்தானி மட்டி சரிச் செய்கிறது.

அந்த வகையில், முல்தானி மட்டியை எப்படி முகத்திற்கு அப்ளை செய்யலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

முல்தானி மட்டியை பயன்படுத்துவது எப்படி?

1. தேவையான பொருட்கள்

  • முல்தானி மட்டி- 2 ஸ்பூன்
  • பன்னீர்- 1 ஸ்பூன்

செய்முறை

முல்தானி மட்டியை சுத்தமான பன்னீரில் கலந்து, ஒரு சிறிய பிரஷ்ஷால் முகத்தில் தடவ வேண்டும்.

சுமாராக 10 நிமிடங்கள் கழித்து, தண்ணீரால் கழுவ வேண்டும்.

15 நிமிடங்கள் கழித்து முகத்தை சுத்தமான நீரில் கழுவி விட்டு, வழக்கமாக பயன்படுத்தும் சரும பராமரிப்பு பொருட்களை பயன்படுத்தலாம்.

இப்படி வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று தடவைகள் செய்து வந்தால் முகம் பளபளப்பாக இருக்கும்.

2. தேவையான பொருட்கள்
  • புதினா - கால் கட்டு
  • வேப்பம் இலை- 50
  • முல்தானி மட்டி- 2 டீஸ்பூன்
பேக் செய்முறை

புதினா, வேப்பம் இலைகள், முல்தானி மட்டிஆகிய மூன்று பொருட்களை நன்றாக கலந்து அரைத்து முகத்தில் தடவ வேண்டும்.

இந்த கலவையை முகபருக்கள் பிரச்சினையுள்ளவர்கள் அடிக்கடி போடலாம்.

வேம்பு இலைகள் மிகச் சிறந்த கிருமிநாசினியாக இருந்து பருக்களையும் காயச் செய்யும். 

பலன்கள்

  1. முகத்தில் வரும் கரும்புள்ளி, வெண்புள்ளிகள் ஆகிய பிரச்சினைகளுக்கு இந்த பேக்கள் சிறந்த நிவாரணியாக இருக்கும்.
  2. முல்தானி மட்டியை வேப்பிலை விழுதுடன் சேர்த்து முகத்தில் தடவினால் முகத்தில் இருக்கும் கிருமிகள் வேறூடன் அழியும்.
  3. கோடைக்காலத்தில் முல்தானி மட்டி பயன்படுத்தும் போது, சிலருக்கு முகத்தில் எரிச்சல் ஏற்படலாம். அவர்கள் முல்தானி மட்டியுடன் தூய்மையான சந்தனத்தூளைக் கலந்து பூசலாம். இது எரிச்சலை கட்டுபடுத்தும். 


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 



Read Entire Article