‘SK 24’ படத்தின் இயக்குனர் மாற்றம்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

2 hours ago
ARTICLE AD BOX

SK 24 படத்தின் இயக்குனர் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.'SK 24' படத்தின் இயக்குனர் மாற்றம்.... அதிர்ச்சியில் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் தற்போது பராசக்தி எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதற்கு முன்பாக இவர், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது திரைப்படத்தில் நடித்திருக்கிறார். ஏறத்தாழ இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் இப்படம் இந்த ஆண்டு தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாகும் என சொல்லப்படுகிறது. இதற்கிடையில் நடிகர் சிவகார்த்திகேயன், டான் படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் தனது 24 வது திரைப்படத்தில் நடிப்பதற்கோ ஒப்பந்தமாகி இருந்தார். தற்காலிகமாக SK 24 என்ற தலைப்பு வைக்கப்பட்டிருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு, சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் முடிந்த பிறகு தொடங்கும் என செய்திகள் வெளியானது. 'SK 24' படத்தின் இயக்குனர் மாற்றம்.... அதிர்ச்சியில் ரசிகர்கள்!ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி, சிவகார்த்திகேயனின் கால்ஷீட்டுக்காக நீண்ட நாள் காத்திருக்க முடியாது என SK 24 படத்திலிருந்து வெளியேறி விட்டதாக சொல்லப்படுகிறது. எனவே சிபி சக்கரவர்த்தி தெலுங்கில் நானி நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போகிறாராம். அதன் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் புதிய படத்தை இயக்குவார் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் SK 24 படத்தை குட் நைட் படத்தின் இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கப் போகிறார் என்று லேட்டஸ்ட் அப்டேட் வெளிவந்துள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Entire Article