Siragadikka aasai : மனோஜுக்கு ஏற்பட்ட பெரிய விபத்து, கதையில் முக்கியத் திருப்பம்?!

3 hours ago
ARTICLE AD BOX

சிறகடிக்க ஆசை

சிறகடிக்க ஆசை சீரியலில் கதையில் ரசிகர்கள் எதிர்பார்க்காத ஒரு திருப்பம் ஏற்பட்டுள்ளது. மனோஜுக்கு விபத்து நேர்ந்து கண்களில் அடிப்பட்டுள்ளது போன்ற காட்சிகள் ப்ரோமோவில் இடம் பெற்றுள்ளது.

நேற்றைய எபிசோடில் மீனா விஜயாவுக்கு சாப்பாடு கொடுப்பதற்காக பார்வதி  வீட்டிற்கு வருகிறார். அங்கு சிந்தாமணி மீனாவை அவமானப்படுத்துகிறார். விஜயாவும் அவருடன் சேர்ந்து மீனாவை அவமானப்படுத்துகிறார். மீனா அவர்களுக்கு பதிலடிக் கொடுத்துவிட்டு கிளம்புகிறார்.

அதன் பிறகு விஜயாவின் டயட் தொடர்பான காமெடி காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அதோடு நேற்றைய எபிசோட் முடிவில் வெளியான ப்ரோமோவில் ரோகிணியின் மலேசியா மாமாவாக நடிக்கும் மணி மனோஜின் ஷோரூமுக்கு வருகிறார்.

அவரின் தங்கை மகனின் திருமணத்திற்கு சீராகக் கொடுக்க தேவையான எலெக்டிரானிக் பொருட்களை வாங்க வேண்டும். நான் அவனுக்கு டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் நான் வாங்கி கொடுக்கப் போகிறேன் என்று சொல்கிறார். உங்க ஷோரூமில் வாங்கிக் கொள்கிறேன் என்கிறார். ரோகிணி அதிர்ச்சியாகிறார். அந்த சமயத்தில் அங்கு மனோஜ் இல்லை. ஆனால் முத்துவும் அண்ணாமலையும் அங்கு வருகின்றனர்.

மணி தலையில் ஹெல்மெட் போட்டுக் கொள்கிறார். ஆனால் முத்துவுக்கு சந்தேகம் வருகிறது. ஷோ ரூமுக்குள் யார் ஹெல்மெட் போட்டுக் கொண்டுள்ளார் என்று யோசிக்கிறார். முத்து அவரை கண்டுப்பிடிப்பாரா மாட்டாரா என்பது அடுத்து வரும் எபிசோடுகளில் தெரியும்.

இதனிடையே நேற்றிரவு வெளியான மற்றொருப் ப்ரோமோவில், மனோஜ் மருந்தகத்தில் இருந்து வெளியே வரும் போது சாலைக்கு மற்றொருப் பக்கத்தில் தன்னை ஏமாற்றி வீட்டை விற்ற கதிர் காருக்குள் ஏறுவதை பார்க்கிறார். அவரை பின்தொடர்ந்து ஓடும்போது மனோஜ மீது ஒரு வேன் மோதுகிறது. மனோஜுக்கு அந்த விபத்தில் கண்களில் பலத்த காயம் ஏற்படுகிறது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் மனோஜுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ரோகிணிக்கு தகவல் சொல்லப்படுகிறது. ரோகிணி விஜயாவிடம் சொல்கிறார். மனோஜின் கண்களில் கட்டுப் போடப்பட்டுள்ளது. ரோகிணியிடன் இனிமே என்னாலப் பார்க்கவே முடியாதா என்று கேட்கிறார். ரோகிணி அவரை சமாதானப்படுத்துகிறார்.

மனோஜின் பார்வை சரியாகும் வரை ரோகிணி தான் பார்த்துக் கொள்வார். அவர்களின் காதல் அதிகரிக்கும். அப்படியான சூழலில் ரோகிணியின் கடந்த கால வாழ்க்கைப் பற்றி தெரிய வந்தாலும் மனோஜ் விட்டுக் கொடுக்க மாட்டார் என்றே தோன்றுகிறது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Read Entire Article