Siragadikka aasai : பெரிய பிரச்னையில் சிக்கிய மீனா; முத்து எப்படி சமாளிப்பார்?

13 hours ago
ARTICLE AD BOX

சிறகடிக்க ஆசை சீரியலில் யாரும் எதிர்பார்த்திராதப் பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. பரசுவின் மகள் திருமணம், மனோஜ் சந்தித்த விபத்து, புதிதாக இரண்டு காதல் டிராக் என கதை களைகட்டுகிறது.

தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் மீனாவை சிந்தாமணி பெரிய பிரச்னையில் சிக்க வைக்கிறார். அதை பற்றி பார்ப்பதற்கு முன்பு நேற்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

மனோஜ் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புகிறார். மீனா அவருக்கு ஆரத்தி எடுக்க வருகிறார். ஆனால் விஜயா அதை தடுத்து தானே ஆரத்தி எடுக்கிறார்.

மனோஜ் நல்லபடியாக வீடு திரும்பியதை தொடர்ந்து முத்து மருத்துவமனையில் செலவான பணத்திற்கான ரசீதுகளை கொடுக்கிறார். முத்து அவசரத்திற்கு அனைவரிடமும் கடன் வாங்கியதால் அதனை திரும்பக் கொடுக்க வேண்டும் எனக் கேட்க மனோஜ் கோபப்படுகிறார். ரோகிணியும் முத்துவை அவமானப்படுத்துகிறார்.

அண்ணாமலை முத்துவுக்கு ஆதரவாகப் பேசி மனோஜிடம் பணத்தைக் கொடுக்க சொல்கிறார். ரோகிணி பணத்தைத் தருவதாக ஒப்புக் கொள்கிறார். ஸ்ருதி, ரவி ஆகியோரும் முத்துவுக்கு ஆதரவாகப் பேசுகின்றனர்.

ஸ்ருதி வேலை செய்யும் ஹோட்டலுக்கு அவரின் அம்மா எதேச்சையாகச் செல்கிறார். அங்கு ஸ்ருதியைப் பார்த்து அதிர்ச்சியாகிறார். `உங்க மாமனார் வீட்ல அப்படி என்ன பணக் கஷ்டம், என்ன இப்படி வேலை செய்ய வைக்குறாங்க’ என்று குற்றம்சாட்டுகிறார்.

ஸ்ருதி ரவிக்காக தான் இந்த வேலையை செய்வதாக விளக்குகிறார். ஆனால் அவரின் அம்மா சமாதானம் ஆகவில்லை. நேற்றைய எபிசோட் முடிவில் வெளியான ப்ரோமோவில் ஸ்ருதியின் அம்மா செக்கை அண்ணாமலை முன்பு நீட்டி, `எவ்ளோ வேணுமோ எழுதிக்கோங்க, ஆனா என் பொண்ணு இனி வேலைக்குப் போகக் கூடாது’ என்று கூற, முத்து அந்த செக்கை வாங்கி 50 கோடி என நிரப்புகிறார். ஸ்ருதியின் அம்மா பதறிவிடுகிறார். முத்துவின் ஸ்டைலில் ஸ்ருதி அம்மாவுக்கு பதிலடிக் கொடுத்துவிட்டார்.

இன்று வெளியான ப்ரோமோவில் மீனாவுக்கு புதிய ஆர்டர் கிடைக்கிறது. அதுவும் இரண்டரை லட்சம் மதிப்புள்ள ஆர்டர். இதனை முத்துவிடம் சொல்லி மகிழ்கிறார். முத்து சந்தோஷத்தில் மீனாவை அப்படியே தூக்கி சுற்றுகிறார். இதை பார்த்து கடுப்பாகும் விஜயா சிந்தாமணிக்கு போன் செய்து மீனாவுக்கு பெரிய மண்டப டெகரேஷன் ஆர்டர் கிடைத்திருப்பதாக சொல்கிறார்.

இந்த மண்டப ஆர்டர் கிடைக்க நான் தான் காரணம், இதற்கு பின்னால் ஒரு திட்டம் உள்ளது என்கிறார் சிந்தாமணி. இந்த மண்டப அலங்கார ஆர்டர் முடிந்தது மீனா இந்த தொழிலை விட்டே சென்றுவிடுவார். அந்தளவுக்கு பெரிய பிரச்னையை சந்திக்கப் போகிறார் என சிந்தாமணி சொல்கிறார். அது என்ன பிரச்னை, மீனா எப்படி சமாளிப்பார் என்பதை அடுத்து வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

Siragadikka Aasai : `அது கனவு மாதிரிதான் இருந்தது!' - நெகிழும் பாக்யலட்சுமி
Read Entire Article