Seeman Arrest?: எப்பவோ பத்த வச்ச வெடி இப்போதான் வெடிக்குது..விரைவில் சீமான் கைது.?

3 hours ago
ARTICLE AD BOX

நடிகை விஜயலட்சுமி பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு பலமுறை சம்மன் அனுப்பியும், அவர் நேரில் ஆஜராகாததால், அவரை காவல்துறை நெருங்குவதாவும், விரைவில் கைது செய்யப்படலாம் என்றும், அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

நடிகை விஜயலட்சுமி பாலியல் வழக்கின் பின்னணி

கடந்த 2011 ஆம் ஆண்டு, நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக பாலியல் புகார் அளித்தார் நடிகை விஜயலட்சுமி.ஆனால் அந்த புகாரை 2012 ஆம் ஆண்டில் திரும்பப் பெறுவதாக அறிவித்தார். இதானால், அந்த புகாரை போலீசாரும் முடித்து வைத்தனர். இந்த சூழலில், இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்தது சென்னை உயர்நீதிமன்றம்.

இதனிடையே, புகாரை ரத்து செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்தார் சீமான். அந்த வழக்கு கடந்த 22 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற  நீதிபதி ஜிகே இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அவர் பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து சீமானுக்கு ஷாக் கொடுத்தார்.

அதாவது, நடிகை விஜய லட்சுமிக்கு சீமான் மீது காதல் எல்லாம் இல்லை. பல்வேறு பிரச்னைகள் காரணமாகத்தான் விஜயலட்சுமி குடும்பத்தினர் சீமானை அனுகி உள்ளனர். சீமான் விஜயலட்சுமியை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி அவருடன் உறவு வைத்துள்ளார்.அதேபோல் சட்டப்படி திருமணம் செய்துகொள்வோம் என்றும் கூறியிருக்கிறார். அதை நம்பி, சீமானின் வற்புறுத்தலால், 7 முறை கருக்கலைப்பும் செய்திருக்கிறார் விஜயலட்சுமி. அதோடு, அவர்களிடமிருந்து சீமான் பெரும் தொகையையும் பெற்றுள்ளார் என்றும் வழக்கின் விசாரணையில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல், அரசியல் அழுத்தம் காரணமாக சீமான் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், மன உளைச்சல் காராணமாகவே புகாரை திரும்ப பெற கடிதம் அனுப்பியதாக விஜயலட்சுமியும் கூறியுள்ளார்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதிலிருந்தே, மிரட்டல் காரணமாக தான், புகாரை விஜயலட்சுமி திரும்ப பெற்றுள்ளார் என்பது தெளிவாகிறது என்றும், பாலியல் வன்கொடுமை புகார் மிகவும் தீவிரமானது என்பதால், அந்த புகாரை தன்னிச்சையாக திரும்ப பெற முடியாது என்று கூறிய நீதிபதி, சீமான் மீது விஜயலட்சுமி சொன்ன புகார் அவரது வாக்குமூலத்தின் மூலம் உறுதியாவதால், சீமானுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய முடியாது” என்று கூறியிருந்தார்.

சீமானை விரைவில் கைது செய்ய காவல்துறை திட்டம்.?

நீதிபதியின் உத்தரவு சீமானுக்கு பெரும் நெருக்கடியாக மாறியுள்ள நிலையில், சென்னை வளசரவாக்கம் காவல் துறையினார், பிப்ரவரி 27 காலை 10 மணிக்கு காவல் நிலையத்தில் சீமான் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியிருந்தனர். இதனிடையே பெங்களூருவில் தங்கி இருக்கும் விஜயலட்சுமியிடமும் காவல் துறையினர் விசாரணை செய்ததாகவும் தகவல் வெளியானது.

இந்த சூழலில், சீமான் இன்று(27.02.25) வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சீமானோ கட்சி நிகழ்ச்சிகளில் பிசியாக இருப்பதால் ஆஜராகவில்லை. சீமான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சீமான் ஆஜராக 4 வாரம் அவகாசம் வேண்டும் என கடிதம் அளித்துள்ளார். இதனிடையே, சீமான் ஆஜராக வேண்டும் என்று அவரது வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டது. அந்த சம்மனை சிலர் கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ள சூழலில், அவர் விரைவில் கைது செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Read Entire Article