ARTICLE AD BOX
உங்கள் SBI வங்கி கணக்கில் இருந்து ரூ.236 பிடித்தம் செய்யப்பட்டுள்ளதா? எதற்காக இதுபோல ரூ.236ஐ பிடித்தம் செய்யப்பட்டுள்ளது என்பதை பார்ப்போம்.

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி தொடர்ந்து புதிய சேவைகள் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களை வழங்கி வருகிறது. எனவே தான் இந்த வங்கியில் அதிக மக்கள் கணக்கு வைத்துள்ளனர்.

இந்நிலையில் உங்கள் SBI வங்கி கணக்கில் இருந்து ரூ.236 பிடித்தம் செய்யப்பட்டுள்ளதா எதற்காக என்பதை பார்ப்போம்.

கடந்த சில வாரங்களில் ரூ.236 பிடித்தம் செய்யப்பட்டதாக மேசேஜ் வந்திருக்கும். நாம் யாருக்கும் பணம் அனுப்பவில்லை. ஆனால் ஏன் ரூ.236 பிடித்தம் செய்தார்கள் என்ற சந்தேகம் வந்திருக்கும்.

எஸ்பிஐ வருடாந்திர பராமரிப்பு கட்டணமாக 200 ரூபாய் வசூலித்துள்ளது. இதற்கு 18% ஜிஎஸ்டி விதித்துள்ளது.

கிளாசிக், சில்வர், குளோபல் கார்டுக்கு 236 ரூபாய் கட் ஆகும்.

பிளாட்டினம் கார்டு பயனர்களுக்கு 325+ ஜிஎஸ்டி, பிளாட்டினம் பிசினஸ் ரூபே கார்டு பயனர்களுக்கு 350+ஜிஎஸ்டி.

பிரைட்/பிரீமியம் பிசினஸ் டெபிட் கார்டுக்கு 425+ ஜிஎஸ்டி கட்டணம் உள்ளது.