ARTICLE AD BOX
Sarigamapa Little Champs:தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி சரிகமப லிட்டில் சேம்ப்ஸ். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
அர்ச்சனா தொகுப்பாளராக பங்கேற்க ஸ்ரீனிவாஸ், எஸ்.பி.பி சரண், சைந்தவி மற்றும் ஸ்வேதா மோகன் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர்.
லெஜண்ட்ரி ரவுண்ட்
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விதமான வித்தியாசமான ரவுண்ட் கொண்டாடப்பட்டு வருகிறது, அந்த வகையில் இந்த வாரம் இசை ஜாம்பவான்களான எஸ்.பி. பி, யேசுதாஸ் மற்றும் மலேசியா வாசுதேவன் அவர்களின் பாடல்களை பாடும் லெஜண்டரி ரவுண்ட் நடைபெற உள்ளது.
மேலும் இந்த ரவுண்டில் கங்கை அமரன், யுகேந்திரன் வாசுதேவன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர். போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தனித்துவமான குரலில் பாடல்களை பாடி அசத்த உள்ள நிலையில் இந்த ரவுண்டில் சரிகமப பிரபலம் ஒருவரை சரிகமப மேடை கௌரவப்படுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெய்ச்சா-வை கௌரவப்படுத்திய சரிகமப
ஆமாம், சரிகமப இசைக்குழுவில் முக்கியமான ஒரு இசைக்கலைஞராக அங்கம் வகிப்பவர் ஜெய்ச்சா. இவர் பல வருடங்களாக இசை துறையில் பணியாற்றி வருகிறார். இந்த லெஜெண்ட்ரி ரவுண்டில் கொண்டாடப்படும் இசை ஜாம்பவான்களான எஸ்.பி. பி, யேசுதாஸ் மற்றும் மலேசியா வாசுதேவன் என மூவருடனும் இணைந்து பணியாற்றியவர் தான் இவர்.
அதுமட்டுமின்றி இந்த மூன்று ஜாம்பவான்களின் மகன்களுடனும் ஜெயிச்சா அவர்கள் இணைத்து பணியாற்றி உள்ளார். இதுவரை பல ஆயிரம் பாடல்களில் பணியாற்றியுள்ளார். இவரின் தந்தை தான் கடம் சிங்காரி என்ற இசை கருவியை முதல்முறையாக அறிமுகப்படுத்திய பெருமையும் இவர்களின் குடும்பத்தையே சேரும்.
இத்தனை சிறப்புமிக்க ஜெயிச்சா அவர்களை சரிகமப குழு இந்த லெஜெண்ட்ரி ரவுண்டில் கௌரவித்துள்ளது. இதுகுறித்த காட்சிகளை இந்த வார ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
மூச்சு விடாமல் பாடிய மஹதி
இந்நிலையில், பாடகர் எஸ்பிபி மூச்சுவிடாமல் பாடிய பாடல் என பலராலும் கொண்டாடப்படுவது மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ என்ற பாடல். இதை அத்தனை எளிதில் பாடிவிட முடியாத நிலையில், சரிகமப லிட்டில் சாம்ஸ் சீசன் 4 போட்டியாளரான மஹதி, இதனை மூச்சு விடாமல் பாடி அசத்தியுள்ளார். இதைப் பார்த்த எஸ்பிபி சரண் உள்ளிட்ட நடுவர்கள் அனைவரும் மஹதியை கொண்டாடினர்.
மஹதியை கொண்டாடிய நடுவர்கள்
சரண், மஹதியை தூக்கி முத்தமிட்டு அப்பா இந்த பாட்டை மூச்சு விடாமல் எல்லாம் பாடவில்லை. அதை அவரே பல இடங்களில் சொல்லி இருக்கிறார். ஆனால், இவள் ஒற்றை மூச்சில் இந்த பாட்டை பாடி இருக்கிறாள் என பெருமையாக கூறினார். மேலும், சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த கங்கை அமரன் வாழ்க வாழ்க என வாழ்த்துவதாக கூறி ஆசிர்வதித்தார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்