ARTICLE AD BOX
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான, நடிகை சம்யுக்தா கணவரை விவாகரத்து செய்வதாக தற்போது அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி சின்னத்திரையிலும் விவாகரத்து சமாச்சாரங்கள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது கூட பிக்பாஸ் பிரபலமான நடிகை சம்யுக்தா தனது விவாகரத்து குறித்து அறிவித்துள்ளார்.

கடந்த 1985 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் பிறந்தவர் தான் சம்யுக்தா சண்முகநாதன். படிக்கும் போதில் இருந்தே மாடலிங் துறையில் கவனம் செலுத்திய இவர், பின்னர் பெற்றோர் விருப்பப்படி, கார்த்திக் சங்கர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ராயன் என்ற மகன் ஒருவரும் உள்ளார்.

இந்த நிலையில் தனது கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கடந்த கால வாழ்க்கையிலிருந்து தான் முன்னேறி வருவதாக தெரிவித்தார். மேலும், விவாகரத்து பற்றிய செய்தியை பகிர்ந்து கொண்டுள்ள சம்யுக்தா, இந்த 2025-ல் இறுதியாக நான் என்னுடைய பேப்பர் வேலைகளை எல்லாம் முடித்துவிட்டேன். எப்போதும் இல்லாத அளவிற்கு இப்போது வலிமையானவளாக உணர்வதாக கூறியுள்ளார்.

அதற்கு முன்னதாக ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில், சம்யுக்தா தனது கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் உறவு இருப்பதாக வெளிப்படையாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். கொரோனா லாக்டவுனில் தான் என்னுடைய கணவர் வேறொரு பெண்ணுடன் துபாயில் 4 வருடங்களுக்கு மேலாக இருப்பது தெரிய வந்தது. அப்போது கொரோனா லாக்டவுன் என்பதால் என்னால் எங்கும் செல்ல முடியவில்லை.

அப்போது எனக்கு உதவியாக இருந்தது பாவனா பாலகிருஷ்ணன் தான். நான் இருந்த அதே அபார்ட்மெண்டில் தான் அவரும் உள்ளார். ஆரம்பத்தில் ஹாய், பாய் என்ற அளவிற்கு தான் எங்களது நட்பு இருந்தது. அவர் எனது குடும்பத்தைப் பற்றி கேட்க, நான் எல்லாவற்றையும் சொல்லிவிட்டேன். அப்போது எனக்கு ஆறுதல் கூறினார்.

லாக்டவுன் என்பதால் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்தோம். அதன் பிறகு இருவரும் நெருக்கமாகிவிட்டோம். இதையடுத்து எனக்கு 8ஆவது ஆண்டு திருமண நாள் வந்தது. எனக்கு நிறைய ஆலோசனைகள் கொடுத்தார். நான் என்ன விரும்புகிறேனோ அதையே செய்ய சொன்னார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போக சொன்னார். இன்று உலகம் அறியும் ஒரு நடிகையாக நான் மாறியிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்க்கு முன்னர் ராதிகா நடித்த சந்திரகுமாரி சீரியலில் நடித்த சம்யுக்தா, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பல படங்களில் நடிக்க தொடங்கினார். அந்த வகையில், காஃபி வித் காதல், வாரிசு, காரி, கொடுவா, மை டியர் பூதம், துக்ளக் தர்பார் போன்ற படங்களில் நடித்திருந்தார் சம்யுக்தா என்பது குறிப்பிடத்தக்கது.