SALE பிச்சி எடுக்குது.. ரூ.18000 விலை குறைப்பு.. OIS கேமரா.. OLED டிஸ்பிளே.. 4492mAh பேட்டரி.. எந்த மாடல்?

1 day ago
ARTICLE AD BOX

SALE பிச்சி எடுக்குது.. ரூ.18000 விலை குறைப்பு.. OIS கேமரா.. OLED டிஸ்பிளே.. 4492mAh பேட்டரி.. எந்த மாடல்?

Mobile
oi-Harihara Sudhan
| Published: Friday, March 7, 2025, 13:04 [IST]

ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் பிரியர்களும் மூக்கில் விரல் வைக்கும்படி ரூ.18,000 விலை குறைப்பில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 புரொடெக்சன் கொண்ட ஓஎல்இடி டிஸ்பிளே, ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கொண்ட மெயின் கேமரா, 18W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 4492mAh பேட்டரி போன்ற பீச்சர்களுடன் வெளியான கூகுள் பிக்சல் 8ஏ (Google Pixel 8a) போனுக்கு கிடைக்கிறது. பிரீமியம் செக்மெண்ட் பீச்சர்களை கொடுக்கும் இந்த போன் அடிமட்ட விலைக்கு கிடைப்பதால், விற்பனையில் பின்னி எடுக்கிறது. விவரம் இதோ.

ஆப்பிள், சாம்சங் போன்களுக்கு அடுத்தபடியாக பிரீமியம் பீச்சர்கள் மற்றும் குவாலிட்டியில் கூகுள் நிறுவனத்தின் பிக்சல் மாடல்கள் களமிறங்குகின்றன. இதில் கூகுள் பிக்சல் 8ஏ போனானது ரூ.52,999 பட்ஜெட்டில் கூகுள் ஏஐ (Google AI) பீச்சர்களுடன் வெளியாகியது. பெஸ்ட் டேக் (Best Take), ஆடியோ மேஜிக் எரைசர் (Audio Magic Eraser), மேஜிக் எடிட்டர் (Magic Editor) பீச்சர்கள் கிடைத்தன.

SALE பிச்சி எடுக்குது.. ரூ.18000 விலை குறைப்பு.. OIS கேமரா.. மாடல்?

இந்திய கேமரா பிரியர்களுக்கு ஏற்ப பிரீமியமான ஏஐ பீச்சர்களை கொடுத்ததால், மர்கெட்டில் முந்தைய மாடல்களைவிட நல்ல வரவேற்பு பெற்றது. இப்போது, விலை குறைப்பை கொடுத்து மேலும் விற்பனையை சூடுபிடிக்க வைத்துள்ளது. ரூ.18,000 விலை குறைப்பில் இப்போது, ஆர்டர் செய்ய கிடைக்கிறது. இந்த விலை விவரங்களுக்கு முன்பாக முழு பீச்சர்களை தெரிந்து கொள்வோம்.

கூகுள் பிக்சல் 8ஏ அம்சங்கள் (Google Pixel 8a Specifications): இந்த பிக்சல் போனில் 6.1 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே மற்றும் அந்த டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) புரொடெக்சன் கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் எச்டிஆர் (HDR) மற்றும் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் சப்போர்ட் கிடைக்கிறது.

மேலும், 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட கூகுள் டென்சார் ஜி3 (Google Tensor G3) சிப்செட் வருகிறது. இந்த பிரீமியம் பர்ஃபாமென்ஸ் சிப்செட்டுக்கு ஏற்ப டைட்டன் எம்2 (Titan M2) செக்யூரிட்டி சிப் கிடைக்கிறது. 7 வருடங்களுக்கான ஓஎஸ் அப்டேட்களை பெற்று கொள்ளலாம்.

அதே நேரத்தில் 7 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்களும் கொடுக்கப்படுகிறது. இந்த கூகுள் பிக்சல் 8ஏ போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது. 18W சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் கிடைக்கிறது. ஸ்லிம் மாடலாக இருப்பதால், 4492mAh பேட்டரி மட்டுமே வருகிறது.

இந்த கூகுள் பிக்சல் 8ஏ போனில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி கொண்ட 64 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. இதில் பிடிஏ போகஸ் (PDA Focus), குவாட் பயர் (Quad Bayer) சென்சார் உள்ளது. 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. அதேபோல 13 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் செல்பீ கேமரா உள்ளது.

இந்த பிக்சல் போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமர வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.52,999ஆக இருக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் விலை குறைப்புடன் ரூ.37,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த விலையில் ரூ.3000 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.18,000 விலை குறைப்பு போக ரூ.34,999 பட்ஜெட்டில் இப்போது ஆர்டர் செய்து கொள்ள முடியும்.

Best Mobiles in India
தொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Read more about:
English summary
28 Percent Discount on Google Pixel 8a With 64MP Camera in Flipkart Sale Check Specifications Price
Read Entire Article